எவர் கொடும்பாவி எரித்தாலும்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமுகத்திற்காக
தொடர்ந்தும் செயற்படுவார்
மனிதர்கள் பிழை செய்யக் கூடியவர்கள் அந்த பிழைகளுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பாவமனின்னிப்பு கோருகின்ற போது அல்லாஹ் அதற்கு பதில் கொடுக்கின்றான் இது இறைவனின் உயர்ந்த நிலையாகும்.
மனிதர்களாகிய நாங்கள் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி கட்டுக்கடங்காத சில சிந்தணைகளின் வெளிப்பாடான கோபத்தின் காரணமாக தவறு இழைப்பதுண்டு இது தவறு என்று தெரிந்த பின்னர் அதற்காக மனம் வருந்துவது வரவேற்கக் கூடியதாகும். ஏன் இதனை இங்கு சொல்ல வேண்டும் என்று சிந்திக்கின்றீர்களா ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேச மக்களின் மனக்குமுறல்களும், அதற்கு அரசியல் தலைமைகள் காட்டும் சில மெத்தனப் போக்குகளும் மக்கள் மத்தியில் உள்ள சிலரினால் மேற்கொள்ளப்படும் மன வேதனை தரும் நிகழ்வுகளை நாங்களும் ஊடகங்கள் மூலமாக பார்த்தோம்.
அது போல் அதன் பிற்பாடு பல தரப்பினரும் பலவிதமாக அவர்களது அறிவுககு எட்டிய வகையிலும்,சிலர் அரசியல் எதிர் தரப்புக்காரர்களை அவமானப்படுத்தும் வழமையான கோல்களுடனும் சமூக வலைத்தளங்களில் கூறி வரும் கருத்துக்களின் ஆரோக்கியம் தொடர்பிலும் சில பதிவுகளை விதைப்பது சமூகத்திற்குள் பிளவுகள் வராமல் முஸ்லிம்கள் ஒற்றுமை என்னும் கயிற்றினை பற்றி பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து எமது அரசியல் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கின்றேன் என்ற வகையில்.
நல்லது இனி சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரத்தில் பல கதைகள் பேசப்பட்டாலும் இந்த கோரிக்கையினை அப்பிரதேச மக்கள் பல வருடங்களாக போராட்டங்களை வீதி மறியல்,ஹர்த்தால்கள் இன்றி முனனெடுத்த வரலாறுகள் உண்டு.அப்போதைய அரசியல் தலைமைகள் இந்த மக்களுக்கு எதை கூறி வாக்குகளை பெற்றார்கள் என்பதில் எமக்கு ஆய்வு செய்து அதற்கு பதில் இருப்பது என்பது சாத்தியமற்ற செயலாகும்.
இருந்த போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமாகிய றிசாத் பதியுதீன் அவர்கள் இந்த மக்களது கோரிக்கை தொடர்பில் செய்த விடயங்களை வேறு பிரதேச மக்கள் பிழையாக காண முடியாது.ஏனெனில் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் இன்றைய அரசியல் வாதிகளிடத்தின் பட்டியலில் இருந்து வேறுபட்ட ஒருவர் என்பதாலும்,அவர் தமது அரசியல் பதவி காலத்தில் ஆற்றியுள்ள பணிகள் தொடர்பில் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுவரும் ஒருவர் என்ற வகையில் அறிவேன்.அவை அனைத்தையும் இங்கு கூற நான் முனையவில்லை.
கடந்த ஜனாதபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் அவசியம் தொடர்பிலும்,மஹிந்த ராஜபக்ஸவினால் முஸ்லிம் சமூகம் பட்ட துன்பியல் தொடர்பில் ஆட்சி மாற்றமொன்றினை கொண்டுவர முக்கியமானதொரு வகிப்பகத்தை வகித்தவர் இந்த றிசாத் பதியுதீன்,
அரசியல் வியாபாரிகள் மலிந்து கிடந்த காலத்தில் அதற்கு சோரம் போகாமல் தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பதவி என்கின்ற அமானிதத்தை முடியுமானவரை சரிவரச் செய்யும் ஒரு அரசியல தலைவராக அவரை கூறினால் அது பிழையான எடுகோலாக இருக்காது,அதற்காக மற்ற அரசியல் வாதிகளை குறைத்தோ அல்லது அவர்களுக்கு எதிரானதொரு நிலைப்பாட்டுக்கு போக வேண்டும் என்பதற்காக இதனை முன் வைக்கவுமில்லை.அதன் பிற்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை இன்று பலரும் பேசுகின்றனர்.
இப்படியாதொரு நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாய்ந்தமருதுக்கு தேர்தல் பிரசார காலத்தில் வந்த போது சாய்ந்தமருது பிரதேச சபை ஏற்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கிச் சென்றதன் பிற்பாடு,அப்பிரதேசத்தில் உள்ள அரசியல் தலைமைகள் இது தொடர்பில் மேற்கொண்டமுயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கவில்லை. இதன் வெளிப்பாடு அப்பிரதேச மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தனர்.
பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த கோரிக்கை தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் சாய்ந்தமருதுவுக்கு வருகை தந்து மக்களுடன் பேசிய பின்னர் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இது தொடர்பில் தொடரந்தேச்சையாக தமிழ் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் பல மாதங்கள் பேசப்பட்டுவந்த நிலையில் எதிர்பாராத சில நிகழ்வுகள் இடம் பெற்றதினால் சாய்ந்தமருது மக்கள் வீதியில் இறங்க நேரிட்டது.
இவ்வாறானதொரு நிலையில் அம்மக்கள் அவர்களதுகோரிக்கையை வென்றெடுப்பதற்காகபோராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இந்த போராட்டத்தில் மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசும்,பொறுப்பான அமைச்சரும் நடவடிக்கையெடுக்க வேண்டியது கட்டாயக் கடமை மாற்றமாக தமக்கு உதவி செய்ய வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் புகைப்படத்தை எரித்ததுடன்,கொடும்பாவி செய்து அதனை எரியூட்டிய சம்பவமானது சகோதர முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பது மிகவும் மன வேதனைக்குரியது. இருந்த போதும் இது மன்னிக்க முடியாததொன்று என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரையில் அவ்வாறு கடும் போக்கு உள்ளம் கொண்ட ஒரு மனிதர் அல்ல.மிகவும் எளிமையான குறிப்பாக கலிமா மொழிந்த ஒரு சகோதரருக்கு எங்கு அநீதி இலைக்கப்பட்டாலும்,தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற சொல்மொழிக்கு அமைய தான் நேரடியாக களம் இறங்கும்,அவ்வாறு வர முடியாத சந்தர்ப்பங்களில் தமது அதிகாரிகளை துணிநது களத்துக்கு அனுப்பி இந்த பிரச்சினையினையினை தீர்த்துக் கொடுக்கும் துார சிந்தணை கொண்டஒருவர் என்பதற்கு போதுமாபன சான்றிதழை எம்மால் துணிந்து சொல்ல முடியும்.
இந்த மன நிலைக் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் என்ன நடந்தாலும் எவர் கொடும்பாவி எரித்தாலும், முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியினை கண்டு ஒழிந்து போகும் மனிதர் அலல என்பதை தெளிவாக கூறவேண்டியுள்ளது.
சாய்ந்தமருது கொடும்பாவி எரிப்பு என்பது அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உள்ளத்தில் வலியினை ஏற்படுத்தியிருக்கும் அதனை எவராலும் நிராகரிக்க முடியாது இதுவும் உண்மையாகும்.
எது எவ்வாறு இருந்தாலும், அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரையில் அல்லாஹ்வின் துணையுடன், அவரது துாய்மையான சிந்தணை செயற்பாட்டுடன் மக்களுக்கான பணியினை ஒரு போதும் இடை நிறுத்திவிடமாட்டார்.
சில வங்குரோத்து அரசியல்வாதிகளும், அவர்களது அடியாட்களும், தொடர்ந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களையும், மக்களையும் பிரித்து காட்ட புதிய புதிய முக நுால்களிலும், சமூக வளைததளங்களிலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற நிலையில் நின்று கருத்துக்களை தெரிவிப்பது தொடர்பில் நீங்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
அல்லாஹ் எதை யாருக்கு நாடியிருக்கின்றானோ அதனை அவன் அடைந்து கொள்ளும் வரை அதற்கான பாதைகள் திறந்திருக்கும். தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை விட அவனுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் சிந்திக்கும் மனிதர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் ஒருவர் என்பதை அவரது 18 வருட அரசியல் பயணத்தில் கண்டுவரும் யதார்த்தமாகும்.
எனவே பொறுத்திருங்கள்,பொறுமையாக இருங்கள். தொழுகையினைக் கொண்டும் ,பொறுமையினை கொண்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நீங்கள் ஒரு சகோதரனுக்காக பிரார்த்திக்கின்ற போது அல்லாஹ் ஒரு மலக்கை அந்த துஆ வினை அல்லாஹ்விடம் கொண்டுவர நியமிப்பதாக எமது உயர்ந்த இஸ்லாம் போதிக்கின்றது என்பதை நினைவுபடுத்தி எமது சகோதர உறவை வலுப்படுத்தும் காரியங்களில் ஈடுபடமுன்வாருங்கள் என்ற நற்செய்தியினை முன்வைத்து மீண்டும் தொடரும் வரை விடை பெறுகின்றேன்.
தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா
0 comments:
Post a Comment