தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை
நிதியை ஏற்பதில்லை!
–சாய்ந்தமருது மக்கள் தீர்மானம்
எதிர்காலத்தில் எங்களை ஏமாற்றிய எந்த அரசியல்வாதிகளிடமும் இருந்து
நிதி ஒதுக்கீடுகளைபெறுவதில்லை என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு அடையாளமாக
பிரதி அமைச்சர் ஹரீஸ் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு
செய்திருந்த பதினைந்து இலட்சம் ரூபாய்களையும் உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரைக்கும்
ஏற்பதில்லை என்றும் தீர்மானித்துள்ளோம் என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
2017-11-03 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை ஒன்று பள்ளிவாசலின் முன்றலில் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே பள்ளிவாயலின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பள்ளிவாயல் தலைவர் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி
சபைக் கோரிக்கை சம்மந்தமாக அரசியல்வாதிகளின் உறுதி மொழிகளையும் நடவடிக்கைகளையுன்
நம்பி நாங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது தொடர்பாக 42 கூட்டங்களை
நடத்தியுள்ளோம்.
உறுதி மொழி தந்தவர்கள் இன்று சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
வழங்கினால் கல்முனை நகரம் பறிபோய்விடும் என்று கூறுகின்றார்கள். அது அப்படி
நடக்காது. ஏனெனில், கல்முனை தனியாக தேர்தல் ந்டந்தால் 7 தமிழ் பிரதிநிதிகளும் 11 முஸ்லிம்
பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள். சாய்ந்தமருதில் 6 பிரதிநிதிகள் தெரிவு
செய்யப்படுவார்கள். இந்த அடிப்படையில் கல்முனையிலிருந்து சாய்ந்தமருது பிரிவதால்
எந்த பாதிப்பும் இல்லை. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்துதான் சாய்ந்தமருது மக்கள்
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாய்ந்தமருது பிரிந்து செல்வதால்
கல்முனைக்கு எந்த துரோகமும் இடம்பெறாது. என்று நன்றாக அறிந்து வைத்துத்தானிந்த
போராட்டத்தை தொடர்ந்தோம்.
எங்களின் இந்த போராட்டத்தை தூண்டிவிட்டவர்கள் எங்களுக்கு உறுதிமொழி தந்த
அரசியல்வாதிகள்தான். எம்மோடு பேசிய அரசியல்வாதிகள் எல்லாம் ஆம் கட்டாயம் செய்ய
வேண்டிய விடயம் நிச்சயமாகச் செய்து தருகின்றோம் என்று கூறியவர்கள் இன்று கல்முனை
பறீபோய்விடும் என்று சொல்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் எங்களிடம்
இதனைக் கூறியிருக்கலாம் அல்லவா?
அமைச்சர் ரவூப் ஹக்கீமை தனித் தலைவராகப் பிரகடனப்ப்டுத்திய ஊர் இந்த சாய்ந்தமருதுதான், பிரதி அமைச்சர்
ஹரிஸை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்கு பெரும் உதவி செய்த ஊரும் சாய்ந்தமருதுதான்.
இப்பட்யான இந்த ஊர் மக்களுக்கு நன்றிக் கடன் செய்வதை விட்டு உறுதி மொழி வழங்கிவிட்டு துரோகம் செய்யலாமா?
இந்த அரசியல்வாதிகள் எங்களிடம் ஆரம்பத்தில் இந்த கோரிக்கையை
விட்டு விடுங்கள் வேறு விதமாகச் சிந்திப்போம் என்று கூறியிருக்கலாமே. அதைவிட்டு கொழும்புக்கு
வாருங்கள், கொழும்புக்கு வாருங்கள் என்று எங்களை அழைத்து ஏமாற்றிவிட்டு இப்பொழுது எதையெல்லாமோ
கதைக்கிறார்கள். இனியும் இவர்கள் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முடியாது.
எங்களின் இந்தப் போராட்டம் கல்முனை மக்களுக்கு எதிரான போராட்டம்
அல்ல. இது சாய்ந்தமருது மக்களின் அடிப்படைத் உரிமை. சாய்ந்தமருதில் எல்லாத் தகுதி இருந்தும்
ஏன் நாங்கள் புறக்கனிக்கப்படுகின்றோம்.
உங்களின் அரசியலுக்காக சாய்ந்தமருது மக்களையும் கல்முனை மக்களையும்
மோதவிடுகின்றீர்கள். உங்களின் அந்த எதிர்பார்ப்புக்கு எங்களிடம் ஒரு போதும் இடமில்லை
எங்களை மோதவிட்ட அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு நிலமைகளை ஆராய்கின்றார்கள்.
அவர்களின் சுய ரூபத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள்.
எங்கள் போராட்டம் ஒரு சாத்வீகமான போராட்டமாகும் எமது மக்கள்
எக்காரணம் கொண்டும் திசை மாறிப்போய்விடக்கூடாது
இந்தப் பிரதேசத்தில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
ஒரு முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் எங்களிடம் சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி சபைப் பிரகடனம் சம்மந்தமான வர்த்தமாணி அறித்தலை பள்ளிவாயலுக்கு கொண்டுவந்து
தருவேன் என்று கூறினார். இன்று அவர் எங்களை நடுவீதியில் விட்டுவிட்டு கொழும்பில் எதுவும் தெரியாதவர் போல் இருந்துகொண்டிருக்கிறார்.
உள்ளுராட்சிசபை விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை சிலர் வெறும் கண்கொண்டு பார்க்கின்றனர். சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்கள் உறவுகளால் ஒன்றினைந்தவர்கள் இந்த உறவுகளை யாரும் பிரித்து விட முடியாது சாய்ந்தமருது மக்கள் நிருவாக பிரிப்பு ஒன்றை நட்டுமே கோருகின்றனர். அதனூடாக கல்முனை மாற்றுச் சமூகத்தின் கைக்கு சென்றுவிடும் என்று போலியான பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறானதொரு பாதகமான
நிலை சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதன் மூலம்
ஏற்படப்போவதில்லை.
சாய்ந்தமருது பள்ளிவாயல்
முன்றலில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் பணிமனை 24 மணிநேரமும் திறந்திருக்கும் இந்த இடத்திற்கு வருகை தந்து எவரும் காத்திராமான ஆலோசனைகளை தெரிவிக்க முடியும். இவ்வாறு பள்ளிவாயல் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment