கல்முனை அரசியலைக் குழப்பிவிட்டிருக்கும்
அரசியல்வாதிகளின் தேர்தல் கால வாக்குறுதி
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கும் விடயத்தில்
கல்முனை நகரில் அன்று தீர்க்கமான முடிவு எதுவும் இல்லாமல் (நீங்கள்
சும்மா அடிச்சி விட்டது) வழங்கிய வாக்குறுதி, இப்பொழுது கல்முனைப்
பிரதேசத்தின் அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கி மக்களிடையே ஒரு
குழப்ப நிலையையும் தோற்றுவித்திருப்பதாக இப்பிரதேசத்திலுள்ள நடுநிலையிலிருந்து சிந்திக்கும்
மக்கள் கவலை வெளியிட்டுவருகின்றனர்.
தேர்தல் காலத்தில் மக்களிடம் இருந்து வாக்குகளைப்
பெறும் நோக்கத்தை மட்டும் மனதில் கொண்டு அதனை எவ்வாறு நிறைவேற்றிக் கொடுப்பது என்ற
திட்டம் எதுவும் இல்லாத நிலையில் பகிரங்கமாக வாக்குறுதியை வழங்கிவிட்டு இன்று
மக்களைவிட்டு மறைந்து வாழ்வதாக மக்கள் பிரதிநிதிகள் மீது குறை
தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அன்று வழங்கிய திட்டமிடப்படாத இந்த
வாக்குறுதியால் இன்று குழம்பிப்போயுள்ள
சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு
துரித நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில் பூனை தனது கண்களை மூடிவிட்டால்
உலகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல் முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவம் தனது
கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கொழும்பில் இருந்து கொண்டிருப்பதை மக்கள்
ஆத்திரத்துடன் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்முனையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சரியானமுறையில்
தீர்வுகாண முடியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் இவர்களால் தற்போது
முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு விடயத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு,
முஸ்லிம்களுக்கான தனி அல்கு என்றெல்லாம் தமிழ் தர்ப்பினரால் பேசும் விடயங்களில்
முஸ்லிம்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பதும் இவர்களின்
செயல்பாட்டைப் பார்க்கும்போது கேள்விக்கூறியாக உள்ளதாகவும் மக்கள் அச்சம்
தெரிவித்து வருகின்றனர்.
கல்முனை முஸ்லிம் பிரிவு மக்களும் சாய்ந்தமருது
மக்களும் இன்று தங்களால் புள்ளடியிடப்பட்டு அமைச்சராகவும், பிரதி
அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பவர்களின் செயல்திறமையின்மையை
அறிந்து தமக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வேறு அர்சியல்வாதிகளை
நோக்கி சென்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது,.
இதோ கல்முனை நகரில் 2015.08.09ல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின்
தேர்தல் பிரச்சார மேடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி-----
கல்முனை நகரில்
*********************************************************************************
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான பிரதேச சபை எனும் விடயம் பிரதமர் கொடுத்த வாக்குறுதி. இந்த மக்களுடைய அதிக பட்ச ஆணையைப் பெற்ற இந்த இயக்கத்தின் ஊடாக பெறப்பட்ட வாக்குறுதி. அதை இந்த இயக்கம்தான் நிறைவேற்றித் தரும் என்பதை மிகத் தெளிவாக நான் சொல்லியாக வேண்டும். அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இதிலே விஷமத்தனமாக புகுந்து விளையாடுவதற்கு, முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போட பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இல்லாத பொல்லாத கதையெல்லாம் கட்டி இந்த விவகாரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அரசியலைச் செய்யலாம் என்று நினைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடத்தில் பலிக்காது என்பதை மிகத் தெளிவாக நான் சொல்லியாக வேண்டும்.
இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடைய சொந்த அரசியலுமல்ல. இது நாங்கள் கொடுத்திருக்கின்ற ஒரு வாக்குறுதி. தலைமை வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கின்ற போது அது நிறைவேறப்பட்டேயாக வேண்டும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
கல்முனை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில்
2015.08.09
*********************************************************************************
0 comments:
Post a Comment