கோத்தாவின் போரை எழுதிய

சிரேஸ்ட ஊடகவியலாளருக்கு

ஞானசார தேரர் அச்சுறுத்தல்


ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாரம்மலவில், பௌத்த பிக்கு ஒருவரின் தாயாரின் இறுதிச்சடங்கிற்கு சென்றிருந்த ஞானசார தேரர், அங்கு ஐலன்ட் நாளிதழின் ஊடகவியலாளர் சந்திரபிரேமவுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

நீயா சந்திர பிரேம? உன்னை அறைந்து விடுவேன். நீ எழுதிய புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரியும்.” என்று ஞானசார தேரர், அந்த ஊடகவியலாளரை எச்சரித்துள்ளார். இதன்போது கடும் வாக்குவாதமும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ஊடகவியலாளர் சந்திரபிரேமவை ஏனைய பிக்குகள் அந்த இடத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தனது 30 ஆண்டு ஊடக வரலாற்றில் இதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று சந்திரபிரேம தெரிவித்துள்ளார்.


கோத்தாவின் போர்என்ற தலைப்பில், சந்திரபிரேம முன்னர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top