இலத்திரனியல் தேசிய (Smart Card) அடையாள அட்டை
தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்..
ஆட்பதிவு திணைக்களத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய(Smart Card) அடையாளயை பயன்படுத்தும் போது பொது மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளவார்களாயின் அதற்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைமுறையிலிருந்த தேசிய அடையாள அட்டையில் தமது பிறந்த வருடத்தின் இலக்கங்களில் இறுதி இலக்கங்கள் இரண்டு மாத்திரமே முறிப்பிடப்பபட்டிருந்த போதிலும் புதிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டையில் பிறந்த வருடம் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டையில் 12 இலக்கங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் இதில் பொது மக்களுக்க பிரச்சினைகள் ஏதேனும் இருக்கமாயின் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டையில் பழைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கங்கள் தனியாக குறிப்பிடப்படாததினால் பொது மக்கள் புதிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டையை பயன்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவார்களாயின் அதற்கு உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்;.
0 comments:
Post a Comment