அஹங்கம பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்

முறியடிக்கப்பட்ட வங்கிக் கொள்ளை

அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட வந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த  சம்பவம் இன்று (19) பகல் அஹங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவரில் ஒருவர் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியபோது, மற்றைய உத்தியோகத்தர் தனது துப்பாக்கியை எடுத்து குறித்த சந்தேகநபரின் கையில் சுட்டுள்ளார்.


இதனையடுத்து குறித்த சந்தேகநபரும்,மற்றைய நபரும் வங்கிக்கு பின்னாள் உள்ள காட்டுக்குள் ஓடி தலை​மறைவாகிய நிலையில்,கையில் துப்பாக்கி சூட்டு காயமடைந்த சந்தேகநபரை அஹங்கம பொலிஸார் கைதுசெய்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top