வரலாற்றை அறிந்து வைத்திருப்பதற்காக இப்பதிவு..
1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்!
1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல்
இனக்கலவரமாகும். இது பௌத்த-மொஹமதியன் கலவரம் அல்லது சிலோனீஸ் கலவரம் எனவும்
அழைக்கப்படுகின்றது. 28 மே 1915ல் கண்டியில் தொடங்கிய கலவரம் அயலில் உள்ள
கிராமங்களுக்கும் பரவி மே30-31ல் கொழுப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும்
பரவியது. ஜூன்09 வரை கொழும்பு, சிலாபம் என பல இடங்களில் தொடர்ந்து. இந்த கலவரங்களில்117 பேர் வரை
கொல்லப்பட்ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களில் 63 சிங்களவர்கள், பிரித்தானிய இராணுவத்தாலும் பொலிசாராலும்
கொல்லப்பட்டனர். 189 பேர் காயமடைந்தும் 04 பேர் பாலியல் வன்புணர்வுக்கும்
உள்ளாகினர். 4075 வீடுகள் கடைகள் என கொள்ளையடிக்கப்ப்ட்டன. 17 பள்ளிவாசல்கள்
தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன் 86 முஸ்லிம் வழிபாட்டு தளங்கள் சேதமாக்கப்பட்டன.
முதலாம் உலகப்போர் காலப்பகுதியில் முஸ்லிம்கள் இலங்கையின்
வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் தமது வியாபார திறமையால் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்திருந்தனர். இலங்கையின் வர்த்தகம் அப்போது அவர்கள் கைகளில் சென்றுவிட
குமுறிக்கொண்டிருந்த சிங்களவர்கள் பிரித்தானிய அரசுக்குக்கு எதிராக ஊவா புரட்சி, மாத்தளை புரட்சி என கலகங்களில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
கம்பளையில் உள்ள வளஹாகொட விகாரையின் பெரகரா
என்றழைக்கப்படும் பௌத்த சமய ஊர்வலங்கள் கம்பளை, கண்டி நகரங்களில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு முன்னே செல்லும் போது
மௌனமாகச் செல்ல வேண்டும் என இலங்கையின் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டில்
வைத்திருந்த முஸ்லிம்கள் கூறினர். தொழுகை நேரத்தை விடுத்து வேறு நேரத்தில பெரஹராவை
நடத்த ஆரம்பத்தில் சிங்களவர்கள் இணங்கினாலும் பின்னர் கண்டி ஒப்பந்தத்தில்
கூறப்பட்டதற்கிணங்க அதனை ஏற்க மறுத்தனர்.
முஸ்லிம்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக 1913ல்
பெரஹரா நடைபெறாமல் நின்று போய்விட்டது. இதனை எதிர்த்து விஹாரதிபதிகள் தொடுத்த
வழக்கில் மாவட்ட நீதி மன்றில் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் உச்ச
நீதிமன்றில் மேன்முறையீடு செய்து தமக்கு சார்பான தீர்ப்பை முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டனர்.
வோல்டர் சோவ், தோம டீ சாம்பியோ ஆகிய நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினால் அதிர்ப்தியடைந்த
பௌத்தர்கள் 28 மே 1915 அன்று இரவு பெரஹரா ஊர்வலத்தை நடாத்தினர். முஸ்லிம் மசூதியை
ஊர்வலம் நெருங்கியபோது அதனை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். பொலிஸ்
பரிசோதகர் F.T.குரே தலையிட்டு
ஊர்வலத்தை திரும்பி செல்லுமாறு பணித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்களவர்கள்
நல்லிரவுக்கு பின் குறிப்பிட்ட பள்ளிவாசலை தாக்கி சேதப்படுத்தினர்.
மே 29ல் முஸ்லிம் கடைகளை சிங்களவர்கள் தாக்க
தொடங்கினர்.கண்டி- கொழும்பு வீதியில் ஒரு சிங்கள இளைஞரை முஸ்லிம்கள் சுட்டு
கொண்டனர். இதுவே இலங்கையின் முதலாவது இனக்கலவரத்தின் இரத்த பலியாக இருந்தது.
வன்முறைகள் சில மணி நேரத்துக்குள்ளாகவே கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
முஸ்லிம்கள் சிங்கள கடைகளை சேதப்படுத்தினர். கட்டுகஸ்தோட்ட, மகயாவ பகுதிகளில் இருந்த முஸ்லிம கட்டங்களை
சிங்களவர்கள் தாக்கினர்.
கலவரம் கட்டுக்கடங்காமல் பரவவே கொழும்பில் இருந்து மேலதிக
பொலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆளுநர் ரொபேர்ட் கல்மர்ஸ், பொலிஸ்மா அதிபர் ஹேர்பேட் டோபிகிக்ன், பிரித்தானிய இராணுவ படையினர் கட்டளையதிகாரி
பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல்ம்
ஆகியோர் 28வது பஞ்சாப் ரெஜிமென்டுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன்
கண்டிக்கு விரைந்தனர்.
ஜூன் 31ல் கலவரம் கொழும்புக்கு பரவியவுடன் நிலமையை
கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல் மீண்டும் கொழும்புக்கே திரும்பு செல்ல
வேண்டியதாயிற்று.
ஒன்பது நாட்களுக்குள் சிங்கள- முஸ்லிம் கலவரம் மேல், வடமேல், தென், சபிரகமூவா மாகாணங்களுக்கும் பரவியிருந்தது.
மாத்தளை , வத்தேகம, கடுகண்ணாவ, ரம்புக்கண, கம்பளை, கொடாபிட்டிய, அக்குரஸ பாணந்துறை ஆகிய
பகுதிகளில் கலவரங்கள் இடம்பெறதொடங்கின.
முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சிங்களைவர்களை கடுமையாக
தாக்க மறுபுறத்தே சிங்கள பகுதிகளில் தமிழர்களுடன் சேர்ந்துகொண்டு சிங்களவர்கள்
முஸ்லிம்களை தாக்கினர். முதலாம் உலகப்போரில் கடுமையாக பாதிப்புற்ற
பிரித்தானியாவுக்கு பெரும் தலையிடியாக மாறியது சிங்கள- முஸ்லிம கலவரத்தை அடக்க
முடியாமல் திணறத்தொடங்கினர். இராணுவ சட்டத்தை பிறப்பித்து கலவரங்களை அடக்க
முயன்றனர். வீதியில் சிங்களவர்கள் தென்பட்டால் அவர்களின் இதயத்தை சுட்டு
துளையிடுமாறு ஆளுநர் ரொபேர்ட் கல்மர்ஸ் தமது படைகளுக்கு உத்தரவிட்டார். எவ்வித
அனுமதியும் இன்றி பொலிசார் சிங்களவர்களை சுடலாம் என பிரிடிஸ் படைகளின் கட்டளை
தளபதி பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல்ம் பொலிசாருக்கு அனுமதியளித்தார்.
மேல் மாகாண அரசாங்க அதிபர் J. G. எரேசர் தலைமையில் விசாரணை அணைக்குழு அமைக்கப்பட்டது. தங்களுக்கு சிங்களவர்கள்
நட்ட ஈடு தர வேண்டும் என முஸ்லிகள் கோரினர். கொழும்பு மேயர் R. W. பைர்டே கொழும்பில் சிங்களவர்கள் வாழும்
பகுதிகளில் புதிய வரியை முன்மொழிந்து அதனை முஸ்லிகளுக்கு நட்ட ஈடாக கொடுக்க
முயன்றார்.
F R சேனநாயக்க, D.S. சேனநாயக்க (முதல்
பிரதமர்),
D B ஜயதிலக்க, W A டி சில்வா, F R டயஸ் பண்டாரநாயக்க, E T டி சில்வா, Dr கேசியஸ் பெரியா C பத்துவந்தொடாவ, D P A விஜயவர்தன, ஜோன் டி சிலவா, W H W பெரேரா, மாட்டினஸ் பெரேரா, ஜோன் M.செனீவரட்ண, ஆதர் V.
டயஸ், H அமரசூரிய, D E விஜயசூரிய, Rev. G D லனெரோல், E A P விஜயரட்ன, ஹரி மெல், A H E மொலமூர், A E குணசிங்ஹ, பத்தரமுல்லே உனான்சே தேரர், என்மண்ட்and Dr C A ஹேவாவிதாரண
அனகாரிக்க தர்மபால சகோதரகள் போன்றோர் தேச துரோகிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு
தேடப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.
0 comments:
Post a Comment