சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வீதியின் அவலநிலை!!!
20 ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினரே!
இது உங்களின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும்

சாய்ந்தமருது (20 ஆம் வட்டாரம்) ஜீ.எம்.எம்.எஸ் வீதியின் அவலநிலையைக் காட்டுவதே இப்படங்களாகும்.
இச்செய்தியும் படங்களும்  கல்முனை ( சாய்ந்தமருது ) 20 ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினரின் பார்வைக்கும் நடவடிக்கைக்கும்.
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வீதியின் மஸ்ஜிதுல் ஆரிபின் (ஹாஜா மக்காம்) பள்ளிவாசல் எல்லையிலிருந்து தோணா வரை கொங்கிறீட்டாகப் போடப்பட்ட இப்பாதை இன்று குன்றும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு அபாயகரமான நிலையில் காட்சி தருகின்றது.
இப்பாதையை திருத்துவதற்கு இதுவரை எவரும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்ட இக் கொங்கிறீட் பாதை ஏன் இவ்வாறு குன்றும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு அபாயகரமான நிலைக்கு போயுள்ளது என்பது குறித்து 20 ஆம்  வட்டார மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநகர சபை உறுப்பினர் ஆராய்ந்து பார்ப்பதுடன் இப்பாதையைத் திருத்துவதற்கும் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இப்பாதையை கொங்கிறீட் வீதியாக போடுவதற்கு யாரோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது?
இந்த வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றும் போது வேலை மேற்பார்வையாளராகக் கடமையாற்றியவர் யார்? அவரின் பதவி என்ன?
இந்த வீதி எந்த தரத்தில் போடப்பட்டது? இவ்வீதிக்கு செலவிட்ட பணம் எவ்வளவு தொகை?

என்ற விபரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று உரியவர்களுக்கு எதிராக தனிப்பட்ட வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் போடலாமா என்பது பற்றியும் மக்கள் பிரதிநிதி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top