செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற
உறுப்பினர்களின் வரிசையில்
அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முதலிடத்தில்
நாடாளுமன்றத்தில்
செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற உறுப்பினராக
இம்முறை மக்கள் விடுதலை முன்னணியின்
தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
manthri.lk
என்ற இணையத்தளம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த
இணையத்தளம் வருடாந்தம் நடத்தும் இந்த கருத்து கணிப்பில்
அனுரகுமார திஸாநாயக்கவே தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த
கருத்து கணிப்பின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் புத்தக பத்திரன இரண்டாம்
இடத்தில் உள்ளார்.
மூன்றாம்,
நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில்
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, சுனில்
ஹந்துன்நெத்தி, மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர்
உள்ளனர்.
நாடாளுமன்ற
உறுப்பினர் பந்துல குணவர்தன ஆறாம்
இடத்தில் உள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஏழாம்
இடத்தில் உள்ளார்.
அதேவேளை
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்
டக்ளஸ் தேவானந்த 8ஆவது இடத்திலும், ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் 9ஆவது
இடத்திலும் உள்ளனர்.
இதற்கு
அடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அவருக்கு
அடுத்ததாக ரவி கருணாநாயக்க ஆகியோர்
இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிறீதரன் 12ஆவது இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இடம்பெற்றுள்ளார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம்
31ஆவது இடத்திலும் முஹம்மத் முஜிபுர்ரஹ்மான்
33 ஆவது இடத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர்
ரிஷாத் பதியுதீன் 42 ஆவது இடத்திலும் அமைச்சர்
பைஸர் முஸ்தபா 47 ஆவது இடத்திலும் எஸ்.எம்.மரிக்கார்
49 ஆவது இடத்திலும் அமைச்சர் கபீர் ஹாசீம் 61 ஆவது இடத்திலும்
எம்.எம்.ஏ.மஹ்றூப் 64 ஆவது இடத்திலும் அலிசாஹீர்
மெளலான 83 ஆவது இடத்திலும் அப்துல் ரஹ்மான் இஸ்ஹாக் 95 ஆவது இடத்திலும் எம்.எல்.ஏ.எம்
ஹிஸ்புல்லாஹ் 116 ஆவது இடத்திலும் இம்றான் மஹ்றூப் 128 ஆவது இடத்திலும் எம்.எச்.எம்.சல்மான் 129 ஆவது இடத்திலும் பைஸல் காசீம் 143 ஆவது இடத்திலும் ஏ.எச்.எம்.பெளஸி 144 ஆவது இடத்திலும் அமீர் அலி சிஹாப்தீன் 151 ஆவது இடத்திலும் காதர் மஸ்தான்
153 ஆவது இடத்திலும் எம்.ஐ.எம்.மன்சூர்
164 ஆவது இடத்திலும் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்
167 ஆவது இடத்திலும் எச்.எம்.எம்.ஹரீஸ்
175 ஆவது இடத்திலும் எம்.எஸ்.தெளபீக் 216 ஆவது
இடத்திலும் உள்ளனர்.
0 comments:
Post a Comment