வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை
பொலிஸாரிடம் ஒப்படைத்த
மாணவனின் நேர்மையைப் பாராட்டி சைக்கிள் அன்பளிப்பு
அம்பாறை மவாட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று வீதி கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவனின் நற்செயலைப் பாராட்டி பாடாலைக்குச் செல்வதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றை பணத்தின் உரிமையாளர் அன்பளிப்பு செய்துள்ளார்.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 08 பிரிவில் கல்வி கற்கும் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த க.ஹயானன் என்ற மாணவனே இவ்வாறு வீதியில் கண்டெடுத்த பணத்தை எடுத்தக் கொண்டு பொலிஸாரை தேடிச் சென்ற போது வீதியில் கடமையில் இருந்த பொலிஸாரைச் சந்தித்து அவர்களிடம் பணத்தையும் வங்கிப் புத்தகம் மற்றும் அடையாள அட்டையையும் ஒப்படைத்திருந்தார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த பணமும் ஆவணமும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த மாணவனை பொலிஸார் பாராட்டியதோடு இம்மாணவனின் செயல்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாணவர்களும் செயற்படல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
பணத்தைக் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு அந்தமாணவனின் நற்செயலை பாராட்டு வகையின் இன்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை பணத்தின் உரிமையாளரான நவரட்ணம் சுந்தரேஸ்வன் (வாவு) சுமார் 15,500 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பு செய்தார்.
மாணவனை பாராட்டும் இவ்வைபவத்தில் திருக்கோவில் வலயக்கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் வி. குணாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். தர்மபாலன், பாடசாலை அதிபர் வி. ஜயந்தன், மாணவனின் வகுப்பாசிரியர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.