இலங்கையில் தொழிலாளர் தினத்தில் மாற்றம்
மே மாதம் 7ஆம் திகதியன்று
அனுஷ்டிப்பதற்கு தீர்மானம்
இலங்கையில், சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ஆம் திகதியன்று அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (27) கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆண்டு 'வெசக்' முழுநோன்மதி தினம்ஏப்ரல் 29 ஆம் திகதி
கொண்டாடப்படவுள்ள நிலையில், 'வெசக்' வாரம் நிறைவடைந்ததன் பின்னர் மே தின நிகழ்வுகளை
கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க
குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment