இலங்கை
இறப்பரை
இறக்குமதி செய்ய தயார்
-ஸ்லோவாக்கியா
நிதியமைச்சர்
கார் உற்பத்தி கைத்தொழிலுக்காக தமது நாட்டிற்கு இலங்கையில்
இருந்து இறப்பரை இறக்குமதி செய்ய தயார் என்று ஸ்லோவாக்கியாவின் துணைப் பிரதமரும்
நிதியமைச்சருமான பீற்றர் கசிமிர் [Peter Kazimir] தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன்
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.
இதுதொடர்பில் அமைச்சர் கருத்துதெரிவிக்iயில், இறப்பர் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடுகளில்
இலங்கையும் ஒன்று . இலங்கைக்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையிலான வருடாந்த
வணிகத்தின் பெறுமதி நான்கரைக் கோடி டொலரைத் தாண்டுகிறது. இதனை மென்மேலும்
அதிகரிக்க ஸ்லோவாக்கியாவிற்கான இறப்பர் இறக்குமதி வழிவகுக்கும் என்று அமைச்சர்;
தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை
வலுவூட்டுவது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
0 comments:
Post a Comment