கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தெரிவாகியுள்ள
கூட்டமைப்பு உறுப்பினர்கள்
சத்தியப்பிரமாண பத்திரம் கையளிப்பு
                                                                                                                                                       


கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ஏழு உறுப்பினர்களும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை நேற்று கல்முனை மாநகர சபை செயலகத்தில் வைத்து கையளித்துள்ளனர்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனுடன் கே.விஜயரட்ணம், பொன் செல்வநாயகம், கே.சிவலிங்கம், என்.இராஜரட்ணம், எஸ்.குபேரன், கே.மகேந்திரன் ஆகியோர் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை கையளித்தனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top