2018.03.27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்
எடுக்கப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்



01. இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் (யுயுவு) (விடய இல. 06)
இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின் நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்து சிறு மற்றும் நடுத்தர விவசாய துறைகளுக்கு அவசியமான நிபுணத்துவ கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்காக பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான சட்ட மூலத்தினை தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக மேலதிக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 09)
களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் போது இனங்காணப்பட்ட புதிய வேலைத்திட்டங்களின் விளைவினால், அதன் ஒப்பந்த தொகையினை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் மேலதிகமாக தேவைப்படுகின்ற நிதியில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக நிதியினை பெற்றுத் தருவதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், உரிய கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. தல்பிடிகல நீர்தேக்க வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 12)
தல்பிடிகல நீர்தேக்க வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையில் 15 வீதத்தினை உள்ளடக்கும் வகையிலான 26.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு மக்கள் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. ருதானையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கொழும்பு வலயத்துக்குரிய புகையிரத நிலையத்தில் 'இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையினை' ஸ்தாபித்தல் (விடய இல. 15)
பல்வேறு தரப்பினருக்கும் நன்மைப்பயக்கும் வகையில் ருதானையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கொழும்பு வலயத்துக்குரிய புகையிரத நிலையத்தில் 'இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையினை' ஸ்தாபித்தல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இலங்கையில் மரத்தொழில் பெறுமதியினை அதிகரித்தல் (விடய இல. 22)
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு தொழில் துறை அபிவிருத்திகளில் மரத்தொழில் துறை அபிவிருத்தியானது மந்த கதியினையே காட்டி நிற்கின்றது. இதனால் குறித்த துறையில் நிலைபேறான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கினங்க குறித்த துறையில் பல்வேறு உதவிகளை வழங்கி வருவின்ற ஐவெநசயெவழையெட வுசழிiஉயட வுiஅடிநச ழுசபயnணையவழைn – ஐவுவுழு நிறுவனத்தின் உறுப்புரிமையினை பெற்றுக் கொள்வதற்கும், மரத்தொழிலில் பிரசித்தி பெற்று விளங்குகின்ற மொரடுவை பகுதியில் மரத்தொழில் வடிவமைப்பு புத்தாக்க நிலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தின் ஊடாக அரச மரக்கூட்டுத்தாபனம் மற்றும் மொரடுவை பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் குழுக்களின் ஒத்துழைப்புடன் முன்னணி வகிக்கின்ற மர வகைகளை விருத்தி செய்து விசேடமான மர வடிவமைப்பு வலயமாக மொரடுவை பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு முடியும் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற் கூறிய திட்டத்தினை செயற்படுத்துவதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலம் உரிய நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. பயாகலை சுகாதார மருத்துவ அலுவலகர் காரியாலயத்தினை ஸ்தாபிப்பதற்காக காணியொன்றை கையகப்படுத்துதல் (விடய இல. 25)
பயாகலை, வடுகொடை பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் நலன் கருதி, பயாகலை சுகாதார மருத்துவ அலுவலகர் காரியாலயத்தினை ஸ்தாபிப்பதற்காக மூடிய நிலையில் காணப்படுகின்ற வடுகொடை ஆரம்ப பிரிவு பாடசாலை பூமியினை தமது அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. மூளை செயலிழந்த நபர்களின் உடலுறுப்புக்களை பிறிதொருவருக்கு பொருத்தும் செயன்முறையினை இலங்கையில் அறிமுகம் செய்தல் (விடய இல. 26)
மூளை செயலிழந்த நபர்களின் உடலுறுப்புக்களை பிறிதொருவருக்கு பொருத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இலங்கையினுள்ளும் செயற்படுத்துவதற்கான செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. தொழில்துறைகளுக்கு புத்தாக்கவியலாளர்களை உள்நுழைத்தல் (விடய இல. 27)
பதிவுசெய்யப்பட்ட பெடன்ட் அனுமதிப்பத்திரம் அல்லது உகந்த வியாபார கருத்துக்களுடன் கூடிய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி தகைமையினை () பெற்றுக் கொண்டவர்களை தொழில்துறைகளுடன் இணைத்துக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதன் போது புத்தாக்கவியலாளர்களை உரிய தொழிற்துறைகளில் ஊக்குவிப்பதுடன், அவர்களின் மாதாந்த சம்பளத்தில் 50 வீதத்திற்காக பங்களிப்பினை வழங்குவதற்கும் (ரூ. 50,000 மற்றும் 24 மாதத்திற்கு உட்பட்டு) அதற்கு உரிய பெடன்ட் அனுமதி பத்திரத்தினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவுகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
குறித்த பணியினை மேற்கொள்வதற்கு தகுந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக செயற்குழுவொன்றை நியமிப்பதற்கும், அச்செயற்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென தொழில்நுட்ப குழுவொன்றை நியமிப்பதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை நடாத்துதல் (விடய இல. 28)
இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. இடைக்கால விதிமுறைகளை விதித்தல் மற்றும் செயற்படுத்துவதற்காக பிரயோக தடைகளை தாண்டும் வகையில் 2017ம் ஆண்டு 24ம் இலக்க தேசிய வருமான சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 339)
2017ம் ஆண்டு 24ம் இலக்க தேசிய வருமான சட்டத்தினை 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல் படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே காணப்பட்ட தேசிய வருமான சட்டத்தில் காணப்பட்ட குறைவாடுகளை நிவரத்தி செய்யும் வகையில் அமுலாக்கப்பட்ட புதிய தேசிய வருமான சட்டத்தினை செயற்படுத்தும் போது பல தடைகளை எதிர்நோக்க வேண்டி வரும். இதனை கருத்திற் கொண்டு குறித்த சட்டத்தினை 2017ம் ஆண்டு 24ம் இலக்க தேசிய வருமான சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. தேசிய கட்டுமான வரி (திருத்தம்) சட்டமூலம் (விடய இல. 34)
2018ம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனைகளின் அடிப்படையில் பல திருத்தங்களை உள்ளடக்கி 2009ம் ஆண்டு 09ம் இலக்க தேசிய கட்டுமான வரி சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. இலங்கை இலகு ரக புகையிரத வேலைத்திட்டம் தொடர்பிலான சட்டமூலம் (விடய இல. 36)
இலங்கை இலகு ரக புகையிரத வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முன்பு அதற்கு உரிய ஒழுங்குமுறை தொகுப்பினை தயாரிக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள இலகுரக புகையிரத முறையினை நிர்ணயித்தல் மற்றும் முகாமைத்துவத்துக்காக சட்ட ரீதியான நிர்வனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், உரிய ஏனைய சட்ட விதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், இலங்கை இலகு ரக புகையிரத வேலைத்திட்டம் தொடர்பிலான சட்டமூலம் தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பிரஜைகள் பூமி அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்காக பிரஜைகள் பூமி அபிவிருத்தி மீளாய்வுக் குழுவொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 37)
பிரஜைகள் பூமி அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்காக பிரஜைகள் பூமி அபிவிருத்தி மீளாய்வுக் குழுக்களை, அநுராதபுரம், கதிர்காமம், சேருவிலை, மாத்தளை அலுவிஹாரை, மஹியங்கனை, களினி, கோட்டை, தெவிநுவர, முதியங்கனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய ஒவ்வொரு பிரஜைகள் பூமிக்காகவும் ஸ்தாபிப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவுக்கு பதிலாக, பெருந்தோட்ட நிர்ணய மற்றும் இணக்க நிர்வனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 46)
பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பான அரசாங்கத்தின் உரிமை தொடர்பிலான மேற்பார்வை நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சின் கீழ் பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவு மேற்கொள்கின்றது. குறித்த கம்பனிகளின் எஞ்சியுள்ள 28 வருட குத்தகை காலத்திலும் குறித்த மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட நிர்ணய மற்றும் இணக்க நிர்வனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. 2562 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் அரச வெசாக் உற்சவத்துக்காக மின்சாரத்தினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 51)
2562 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் அரச வெசாக் உற்சவத்துக்காக மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு மேலும் தேவைப்படுகின்ற நிதியினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. பௌத்த விவகார திணைக்களத்துக்காக குருநாகல் பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 52)

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பௌத்த மத ஸ்தலங்களை நிர்வகிப்பதற்கு இலகுவான முறையில் பௌத்த விவகார திணைக்களத்துக்காக குருநாகல் பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. மனித கண்ணியம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் (விடய இல. 53)
மனித கண்ணியம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான சட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
18. இலங்கை தேசிய கிரந்தங்கள் அபிவிருத்தி சபையினை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 58)
இலங்கை தேசிய கிரந்தங்கள் அபிவிருத்தி சபையின் மூலம் நிறைவேற்றுவதற்காக எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் பணிகளை மேலும் பயனள்ள விதத்தில் நிறைவேற்றுவதற்காக அதற்காகவே ஒதுக்கப்பட்ட நிர்வனம் ஒன்று இருக்க வேண்டும் என்ற தேவையினை உணர்ந்து, 2012ம் ஆண்டு இல்லாதொழிக்கப்பட்ட இலங்கை தேசிய கிரந்தங்கள் அபிவிருத்தி சபையினை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19. சாதாரண கல்வி நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் (உலக வங்கியின் நிதியுதவியுடன்) (விடய இல. 59)
சாதாரண கல்வி நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. தற்கால தொழில் சந்தையின் தேவைகளுக்கு உகந்த வகையில், தகுதியான மனித வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 60)
காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு இலக்குகளை அடைந்துக் கொள்வதற்காக செயற்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 'தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை' சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்தின் (OFID) ஒத்துழைப்புடன் செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. பிரதேச மட்டத்தில் சிறு அளவிலான அடிப்படை வசதிகள் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 63)
பிரதேச மட்டத்தில் சிறு அளவிலான அடிப்படை வசதிகள் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவ்யோசனைகளை செயற்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகள் மற்றும் இரட்டிப்பாவதை தடுக்கும் வகையில் பிரேரிக்கப்படுகின்ற செயன்முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு தொகுதிகளை நிர்வகிப்பதற்காக ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் (விடய இல. 64)
மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு தொகுதிகளை நிர்வகிப்பதற்காக முறையான இயந்திரம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் விளையாட்டு அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. விளையாட்டுக்களில் ஈடுபடும் போது தடைசெய்யப்பட்ட வஸ்துக்களை பயன்படுத்துவதற்கு எதிரான ஒப்புதல் சட்டத்தில் 34 (1) பிரிவின் கீழ் விளையாட்டு அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட சட்ட விதிமுறைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தல் (விடய இல. 65)
விளையாட்டுக்களில் ஈடுபடும் போது தடைசெய்யப்பட்ட வஸ்துக்களை பயன்படுத்துவதற்கு எதிரான ஒப்புதல் சட்டத்தில் 34 (1) பிரிவின் கீழ் விளையாட்டு அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட சட்ட விதிமுறைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் விளையாட்டு அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. வடமேல் மாகாண கால்வாய் வேலைத்திட்டத்தின் நெபடகஹவத்தையிலிருந்து மஹகிதுல நீர்த்தேக்க பிரவேச சுரங்கம் வரையான பிரதான கால்வாயினை ஸ்தாபித்தல் (விடய இல. 67)
வடமேல் மாகாண கால்வாய் வேலைத்திட்டத்தின் நெபடகஹவத்தையிலிருந்து மஹகிதுல நீர்த்தேக்க பிரவேச சுரங்கம் வரையான பிரதான கால்வாயினை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 5,505.28 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில், China State Construction Engineering Corporation Ltd. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலினை குறைப்பதற்காக கண்டி சனநெரிசல் மிகுந்த பகுதிகளுக்கான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 67)
கண்டி நகர வலயத்தில் வாகன நெரிசலினை குறைப்பதற்காக கண்டி சனநெரிசல் மிகுந்த பகுதிகளுக்கான புகையிரத வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு ஆசியி அபிவிருத்தி வங்கியின் நிதியம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இனங்காணப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய நிர்வனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த நிர்வனங்களில் இருந்து கேள்வி மனுக்களை கோரியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. ஊவா மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 72)
ஊவா மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்து அதனை பராமரிப்பதற்கான 15 ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒப்படைப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 73)
அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தினை முன்னுரிமை வழங்கி செயற்படுத்துவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. இலங்கையில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள நகரங்களுக்காக சுகாதார மற்றும் ஆரோக்கிய வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் - திட்டமிடல் மற்றும் மேற்பார்வை ஆலோசனை சேவை (விடய இல. 74)
இலங்கையில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள நகரங்களுக்காக சுகாதார மற்றும் ஆரோக்கிய வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் - திட்டமிடல் மற்றும் மேற்பார்வை ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஆஃள ஊயடிiநெவ னு'நுவுருனுநுளு ஆயுசுஊ ஆநுசுடுஐN யனெ M/s Cabinet D’ETUDES MARC MERLIN and SWECO Denmark A/S Green Tech Consultants (Pvt) Ltd. ஆகிய நிர்வனங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு இணைப்பு வியாபாரத்துக்கு பெற்றுக் கொடுப்பது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. களனி திஸ்ஸ இரட்டை சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தில் வாயு டெர்பைனுக்காக புதிய உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 78)
களனி திஸ்ஸ இரட்டை சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தில் வாயு டெர்பைனுக்காக புதிய உதிரிப்பாகங்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அதன் ஆரம்ப உற்பத்தியாளரான General Electric (GE) நிர்வனத்தின் தேசிய முகவரான இந்தியாவின் GE BHEL-GE Gas Turbine Services  தனியார் கம்பனியிடத்தில் இருந்து 582 மில்லியன் ரூபா தொகைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. இலங்கை மின்சார சபையின் மூலம் தற்போது தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடம் இருந்து மின்சாரத்தினை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தின் கால எல்லையினை நீடித்தல் (விடய இல. 79)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் ஒப்புதல் குழுவின் சிபார்சினை கவனத்திற் கொண்டு, வரையறுக்கப்பட்ட Ace Power கம்பனிக்கு உரித்தான தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடத்தில் இருந்து மின்சாரத்தினை கொள்முதல் செய்யும் காலத்தினை மேலும் மூன்று வருடத்தினால் நீடிப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. மொரகொல்லை நீர் மின்னுற்பத்தி நிலையத்தினை நிர்மானித்தல் (விடய இல. 79)
மொரகொல்லை நீர் மின்னுற்பத்தி நிலையத்தினை நிர்மானிப்பதற்கான வேலைத்திட்டத்தினை 03 பகுதிகளாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டத்தினை செயற்படுத்துவதற்காக 5.21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டள்ளது. குறித்த கொள்முதல் நடவடிக்கைகளுக்காக 07 விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் குறைந்த விலையில் விலை மனுவினை முன்வைத்துள்ள வீ.வீ கருணாரத்ன கம்பனிக்கு 1,109.4 மில்லியன் ரூபா தொகைக்கு வரியின்றி வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
32. விவசாய பயிர்கள் காப்புறுதிக்காக மீள்காப்புறுதி முறையொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 81)
விவசாய பயிர்கள் காப்புறுதிக்காக மீள்காப்புறுதி முறையினை Renaisance Re Lloyds Syndicate கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
33. கொழும்பு துறைமுகத்தின் வடக்கு துறைமுக பிரிவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான சாத்திய வள ஆய்வினை மேற்கொள்ளல் (விடய இல. 81)
கொழும்பு துறைமுகத்தின் வடக்கு துறைமுக பிரிவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான சாத்திய வள ஆய்வினை மேற்கொள்வதற்கு உகந்த ஆலோசனை கம்பனியொன்றை தெரிவு செய்வதற்காக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
34. காங்கேசன்துறை துறைமுகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 84)
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதியினை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போது காணப்படுகின்ற பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதிய இரங்கு துறையொன்றை நிர்மானித்தல் ஆகிய பணிகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் மூலம் மேற்கொள்வதற்கும், அதற்காக அவசியமான கொள்முதல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவினை நியமிப்பதற்கும் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
35. கிராமிய பாலங்கள் வேலைத்திட்டத்துக்காக மேலதிக நிதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 86)
கிராமிய பாலங்கள் வேலைத்திட்டத்துக்காக மேலதிக நிதியினை, அதன் ஆரம்ப வேலைத்திட்டத்துக்காக நிதியுதவியளித்த நிர்வனத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக உரிய கடன் ஒப்பந்தத்தினை நீடிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
36. கொடுகொடை, கொலன்னாவ, பாதுக்கை, ஹொரனை, தெஹிவளை மற்றும் மாதம்பை கிரிட் துணைமின்னிலையங்களை விருத்தி செய்தல் (விடய இல. 91)
கொடுகொடை, கொலன்னாவ, பாதுக்கை, ஹொரனை, தெஹிவளை மற்றும் மாதம்பை கிரிட் துணைமின்னிலையங்களை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தினை தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் கொள்முதல் குழுவின் சிபார்சினை கவனத்திற் கொண்டு, 2,214.16 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s ABB India Ltd. வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
37. சிறுபோகத்திலிருந்து செயற்படுத்தப்படும் வகையில் உர சலுகை கொள்கையினை திருத்தம் செய்தல் (விடய இல. 93)
சிறுபோகத்திலிருந்து செயற்படுத்தப்படும் வகையில் உர சலுகை கொள்கையினை திருத்தம் செய்வது தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
38. ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொதலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தினை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் (விடய இல. 94)
ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொதலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தினை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
39. 2018ம் ஆண்டின் வெசாக் வாரத்துக்கு சமாந்தரமாக அனுஷ;டிக்கப்படுகின்ற மே தின கொண்டாட்ட நடவடிக்கைகளை வேறு தினத்திற்கு மாற்றுதல் (விடய இல. 95)
பௌத்த மத குருக்களின் வேண்டுகோளின் பெயரில், 2018ம் ஆண்டின் வெசாக் வாரத்துக்கு சமாந்தரமாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தின கொண்டாட்டங்களை மே மாதம் 07ம் திகதி அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. அதற்காக மே மாதம் 01ம் திகதி காணப்படுகின்ற விடுமுறையினை இரத்து செய்து, மே மாதம் 07ம் திகதி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top