புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம்
இன்று முதல் அமுல்



புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் New Inland Revenue Act   இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்;துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில், வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது. இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டுஇவெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும்இ அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீப காலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரிமூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80சதவீதத்திற்கும்இ 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும். 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top