செல்லுடிபடியான வீசா இன்றி
வர முயன்றார் நாமல் – அமெரிக்கா
செல்லுடிபடியான வீசா இன்றி பயணம் செய்ய முற்பட்டதால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ , அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய முடியாமல் மொஸ்கோவில் தடுக்கப்பட்டார் என்று அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஊடகமான Polygraph, அமெரிக்க எல்லைக் காவல் பிரிவுடன் (U.S. Border Patrol) தொடர்பு கொண்டு விசாரித்த போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும், செல்லுபடியாகத்தக்க பயண ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டவர்கள், தற்போதைய கடவுச்சீட்டு, செல்லுபடியான வீசா அல்லது அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீசா விலக்கு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாமல் ராஜபக்ஸ அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான செல்லுபடியான வீசாவை கொண்டிருக்கவில்லை என்றும் பொதுவாக அனைத்துலக பயணிகளையும், செல்லுபடியான பயண ஆவணங்களின்றி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்ற விமான சேவை நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்று அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment