சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம்
அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று அதன்படி உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதின் எல்லைகள் ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ளதால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையே முதலாவதாகவும் விரைவாகவும் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிய வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இற்கான அமைச்சரவைப் பத்தரம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment