கண்டி கலவர சூத்திரதாரியை
சிறைச்சாலைக்குச் சென்று
சந்தித்த ஞானசார தேரர்
கண்டி கலவர சூத்திரதாரிமஹாசோன் பலக்காயவின் தலைவர்
அமித் வீரசிங்க
உள்ளிட்ட குழுவினரை,
பொதுபல சேனாவின்
பொதுச் செயலாளர்
கலகொட அத்தே
ஞானசார தேரர்
சிறைச்சாலைக்குச்
சென்று பார்வையிட்டு,
குசலம் விசாரித்துள்ளார்.
கண்டி நிர்வாக
மாவட்டத்தில் இரண்டு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட
வன்முறை சம்பவங்களுடன்
தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்
உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்
கீழ், எதிர்வரும்
28ஆம் திகதி
வரையிலும் அநுராதபுரம்
சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை
அறிந்து கொள்ள முடியாத நிலையில் அவர்களின் உறவினர்கள் எவரும் இதுவரை சந்தேக
நபர்களைப் பார்வையிட செல்ல முடியாத நிலை காணப்பட்டது
இந்நிலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பதுடன் குசலம் விசாரித்துள்ளார்.
அமித்
வீரசிங்க உள்ளிட்ட
குழுவினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இடம் மிக
இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில்கலகொட அத்தே ஞானசார தேரர் அதனை அறிந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு இனங்களுக்கிடையில்,
குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான சமூக வலைத்தளங்களில்
வீடியோ அடங்கிய
காட்சிகளை தரவேற்றம்
செய்து, பிரசாரங்களில்
ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மஹாசோன்
பலக்காயவின் தலைவரான கண்டி-கெங்கல்லையை சேர்ந்த
அமித் வீரசிங்க
என்பவரும், அவருக்கு உதவி ஒத்தாசைகளை புரிந்தனர்
என்றக் சந்தேகத்தில்
ஏனைய ஒன்பது
பேரும், பயங்கரவாத
தடுப்புப் பிரிவினரால்,
கடந்த 8 ஆம்
திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும்,
தங்களுடைய வதிவிட
நிர்வாகத்தின் கீழுள்ள, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஏதிர்வரும் 29 ஆம் திகதி
வரையிலும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.