நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு
அமெரிக்கா நாட்டுக்குள் நுழைவதற்கு தடை
தனது சிறிய
தாயாரின் மரணச்சடங்கில்
பங்கேற்க, மொஸ்கோவில்
இருந்து, ஹொஸ்டனுக்குச்
செல்ல முற்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின், மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ஸ ரஷ்யாவில் நடந்த
தேர்தலைக் கண்காணிக்கச்
சென்றிருந்தார்.
இந்த
நிலையில், அவர்
மொஸ்கோவில் இருந்து, அமெரிக்காவின் டொக்சாஸ் மாநிலத்தில்
உள்ள ஹொஸ்டன்
நகருக்கு விமானத்தில்
செல்ல முயன்றுள்ளார்.
ஆனால்,
எமிரேட்ஸ் விமான
சேவை அதிகாரிகள்,
நாமல் ராஜபக்ஸவை, விமானத்தில்
ஏற அனுமதிக்கவில்லையாம்.
நாமல்
ராஜபக்ஸவை விமானத்தில் ஏற்ற
வேண்டாம் என்று
அமெரிக்க அதரிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் அதிகாரிகள்
கூறியுள்ளனர்.
எனினும்,
நாமல் ராஜபக்ஸவுக்கு விதிக்கப்பட்ட
தடைக்கான காரணத்தை
அவர்கள் கூறவில்லை.
இது
தொடர்பில் நாமல்
ராஜபக்ஸ தனது டுவிட்டரில்
பதிவிட்டுள்ளதாவது,தான் ஹுஸ்டன்
நகருக்கு செல்ல
முற்பட்டவேளை, எமிரேட்ஸ் விமான சேவையானது தன்னை
அமெரிக்கா விமானத்தில்
ஏற்ற வேண்டாம்
என அறிவுறுத்தியுள்ளதாக
கூறி விமானப்
பயணத்துக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறியுள்ளார். அத்துடன்
தான் அமெரிக்கா
செல்வதில் இருந்து
தடுக்கப்பட்டமைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க எவ்வித காரணங்களும் தனக்கு கூறப்படவில்லை
எனவும் அவர்
அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த
15 ஆம் திகதி
நாமல் ராஜபக்ஸ
ரஷ்யாவுக்கு சுயாதீன தேர்தல்
கண்கானிப்பாளராக சென்றிருந்த நிலையில், அமெரிக்கா செல்ல
அனுமதி கிடைக்காததால்
அவர் தற்போது
இலங்கை நோக்கி திரும்பியுள்ளார்.
அமெரிக்காவின்
டெக்சாஸ் மாநிலத்தில்
வசிக்கும் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய
சகோதரான டட்லி
ராஜபக்ஸவின்,
மனைவியான யதீந்திர
ராஜபக்ஸ கடந்த சில
நாட்களுக்கு முன்னர் மரணமானார்.
சிறிய
தாயாரின் மரணச்
சடங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே மொஸ்கோவில்
நாமல் ராஜபக்ஸ தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment