கொழும்பு துறைமுகத்தில்
பங்களாதேஷ் கடற்படைக் கப்பல்
பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான 'பிஎன்எஸ் பங்கபந்து' எனும் கடற்படை கப்பல் இலங்கைக்கான நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
233 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ள 103.7 மீட்டர் நீளமான 'பிஎன்எஸ் பங்கபந்து' கப்பலானது 2407 தொன்கள் எடையினையுடையது.
நாளை நட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment