சிறைச்சாலையில் தீ விபத்து
- 68 பேர் உயிரிழப்பு
வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்தனர். சிறையை உடைத்து தப்பிக்கும் முயற்சியாக தீ வைத்ததாக கூறப்படுகிறது.
வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரத்தில் உள்ள சிறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்துள்ளனர்.
கைதிகள் சிலர் சிறையை உடைத்து தப்பிக்கும் முயற்சியாக தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர். அவர்களை கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போதை பொருட்களும் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment