பரீட்சை பெறுபேறு:
ஆறு மாணவர்கள்
தேசிய ரீதியில் முதலிடம்
கடந்த
டிசெம்பர் மாதம்
நடைபெற்ற கல்விப்
பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை
பெறுபேறுகள் நேற்று இரவு வெளியானது.
பெறுபேறுகளின்
அடிப்படையில் தேசிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ள
மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆறு
மாணவர்கள் தேசிய
ரீதியில் முதலிடத்தைப்
பெற்றுள்ளதுடன் ஒன்பது மாணவர்கள் தேசிய ரீதியில்
இரண்டாம் இடத்துக்குத்
தெரிவாகியுள்ளனர்.
முதலிடத்துக்கு
தெரிவாகியுள்ள மாணவர்களில் இருவர் கம்பஹா ரத்னாவலி
மகளிர் வித்தியாலயத்தைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
தேசிய
ரீதியில் முதல்
இரண்டாம் இடங்களை
பெற்ற மாணவர்களின்
விவரம்
முதலிடம்
பெற்ற மாணவர்
விவரம்
குஷானி
செனவிரத்ன – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
சாமுடி
சுபசிங்க – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
நவோதயா
ரணசிங்க – பெண்கள்
உயர் பாடசாலை,
கண்டி
லிமாஷா
அமந்தி விமலவீர
– மஹாமய பெண்கள்
கல்லூரி கண்டி
ரந்தி
லக்பிரியா – சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம்,
மாத்தறை
கவீஷ
பிரதீபத் – சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
இரண்டாம்
இடம் பெற்ற
மாணவர் விவரம்
நிபுனி
ஹேரத் – தேவி
பாலிகா வித்தியாலயம்,
கொழும்பு
அனீஷா
பெர்னாண்டோ – சி.எம்.எஸ். மகளிர்
கல்லூரி, கொழும்பு
ரிஷினி
குமாரசிங்க – சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட
கவீன்
சிறிவர்தன – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
மிருனி சுரேஷ்குமார் – யாழ். வேம்படி உயர் கல்லூரி
– யாழ்ப்பாணம்
அமந்தி
நயணதாரா – சுஜாதா
கல்லூர – மாத்தறை
நிமந்த
சமாதி விக்ரமசிங்க
– கம்பஹா பண்டாரநாயக்க
வித்தியாலயம்- கம்பஹா
பரீட்சைகள்
திணைக்களத்தின் www.doenent.lk என்ற உத்தியோகப்பூர்வ
இணையத்தளத்திற்கு பிரவேசித்து பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்..
கொழும்பிலுள்ளபாடசாலைகளுக்கு
இன்றைய தினம்
பெறுபேறுகள் அனுப்பப்படவுள்ளதுடன், ஏனைய
பாடசாலைகளுக்கு தபாலில் பெறுபேறுகள் அனுப்பிவைக்கப்படும்.
கல்விப்
பொதுத் தராதர
சாதாரண தரப்
பரீட்சையில் 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில்,
969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது
என கல்வி
அமைச்சு அறிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பரீட்சை முடிவுகள்
கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி OL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண்ணை டைப் செய்து
7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch
மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின் இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.
கடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.
இப்பரீட்சைகளின்போது தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் பாவனை உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment