சிதைந்த நாணயத்தாள்களை
மாற்றிக்கொள்வதற்கு மத்திய
வங்கியில் வசதி
வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:
வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய,
அத்தகைய நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அல்லது அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள பிரதேச அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அல்லது முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அத்தகைய நாணயத்தாள்களை பதிவுத் தபால் மூலம் அனுப்புமாறு இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. தொடர்புடைய விண்ணப்பப் படிவத்தினை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து (www.cbsl.gov.lk) பிரதேச அலுவலகங்களிலிருந்து அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும்இ சிறிய புள்ளியொன்றின் அல்லது கோடொன்றின் வடிவில் அடையாளமிடப்பட்டுள்ள நாணயத் தாள்கள் வேண்டுமென்று உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் அத்தகைய நாணயத் தாள்களை கொடுக்கல்வாங்கல்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்த முடியும். சாதாரணமாகத் தேய்வடைதல், சாதாரணமாக கிழிதல் அல்லது இயற்கை அனர்த்தங்களின் காரணமாக சேதமடைந்த நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொள்ளும் சேவை எவ்விதமாற்றங்களுமின்றி தொடர்ந்தும் இடம்பெறும்.
மேலும், வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை கண்டுபிடிப்பதற்காக நாணயத்தாள் செயன்முறைப்படுத்தல் இயந்திரங்களை அளவுத்திருத்தம் செய்வதற்கு அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தன்னியக்கக் கூற்றுப் பொறி (ATM) அல்லது வேறு நாணயத்தாள் கையாளுகின்ற இயந்திரங்களிலிருந்து பொதுமக்கள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்றினைப் பெற்றுக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய நாணயத்தாளை அருகிலுள்ள வங்கிக் கிளையில் மாற்றிக்கொள்ளலாம்..
மேற்குறிப்பிட்டவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகளிருப்பின் கீழ்குறிப்பிட்ட அலுவலருடன் தொடர்பு கொள்ளலாம்.
கண்காணிப்பாளர்
நாணயத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி
இல.30 சனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை
தொலைபேசி : 011
- 2477587
மின்னஞ்சல் : currency@cbsl.lk
0 comments:
Post a Comment