புலிகளின் ஆயுதக் கப்பல் ,
பிரமுகர்களின் பயன்பாட்டில் இருந்த
குண்டு துளைக்காத ஆடம்பர வாகனங்கள்
நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு
புலிகளிடம்
இருந்து கைப்பற்றப்பட்ட
கப்பல் ஒன்றை
கடற்படையினர் நேற்று நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள
ஆழ்கடலில் மூழ்கடித்தனர்.
விடுதலைப்
புலிகளின் அனைத்துலக
கடல்வழி விநியோகத்துக்காகப்
பயன்படுத்தப்பட்ட கப்பல் ஒன்றை, 2009ஆம் ஆண்டு
டிசெம்பர் மாதம்
கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்தோனேசியாவில்
வைத்து கைப்பற்றப்பட்ட
இந்த கப்பல்,
கொழும்பு துறைமுகத்துக்குக்
கொண்டு வரப்பட்டு,
கடற்படையால் A-522 என இலக்கமிடப்பட்டு,
WE LING என்ற
பெயரில் பயன்படுத்தப்பட்டது.
இந்தக்
கப்பல் தொடர்ந்து
இயக்கப்பட முடியாத
நிலையை அடைந்ததை
அடுத்து, அதனை
ஏலத்தில் விற்க
முனைந்த போதும்,
எவரும் அதனை
கொள்வனவு செய்ய
முன்வரவில்லை.
இதனால்,
அரசின் அனுமதியுடன்
இந்தக் கப்பல்
கடற்படையினரால், ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு கடலில்
மூழ்கடிக்கப்பட்டது.
கப்பலில்
இருந்து அகற்றப்படக்
கூடிய அனைத்து
பெறுமதியான பொருட்களும் அகற்றப்பட்ட நிலையில் இந்தக்
கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
அத்துடன்,
முன்னாள் ஜனாதிபதிகள் , அமைச்சர்கள் மற்றும்
பிரமுகர்களின் பயன்பாட்டில் இருந்த 8 குண்டு துளைக்காத
ஆடம்பர வாகனங்களும்
நேற்று கடற்படையினரால்
கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
இவை
மிகவும் உறுதியனவை
என்பதால் பழைய
இரும்புக்கு விற்க முடியாது என்பதாலும், இவற்றை
ஏலத்தில் விற்றால்
குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதாலும், கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment