எஞ்சிய 18 மாதங்களில் கிராமங்களில் துரித அபிவிருத்தி
1,668 கிராம சேவகர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசாங்கம் மிகுதியிருக்கும் 18 மாதங்களிலும் கிராம மட்டத்தில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கும் எ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 1,668 கிராம சேவகர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை கிராம மட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2 வருடங்களாக நாட்டில் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை நாம் சீர் செய்து வருகின்றோம். நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது ஸ்திரத் தன்மையை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. எவ்வாறாயினும் கிராம சேவகர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கூடாக மிகுதி 18 மாதங்களில் கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீதி வலையமைப்பு, நீர்ப்பாசனத் திட்டங்களை திருத்தியமைத்தல், சுய தொழிலாளர்களுக்கு கடனுதவி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் கூறினார். அரசாங்கம் இவ்வேலைத்திட்டங்களை 2017 ஆம் ஆண்டிலேயே முன்னெடுக்க தீர்மானித்திருந்தபோதும், எதிர்பாராவிதமாக நாட்டில் இடம்பெற்ற வெள்ளம், வறட்சி மற்றும் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு ஆகியன காரணமாக அவற்றை முன்னெடுக்க முடியாத நிலை உருவானதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top