7 பள்ளிவாசல்களுக்கு ஆஸ்திரிய அரசு பூட்டு
60 இமாம்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
நாடுகடத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பு

ஆஸ்திரியா நாட்டின் ஏழு பள்ளிவாசல்களை மூடுவது மற்றும் துருக்கி நிதியில் செயற்படும் 60  இமாம்களை நாடுகடத்தும் அறிவிப்புக்கு அந்நாட்டு முஸ்லிம் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
துருக்கி பள்ளிவாசல் ஒன்று மற்றும் ஆறு பள்ளிவாசல்களை நடத்தும் அரபு மத சமூகத்தை கலைப்பதாக ஆஸ்திரிய ஜனாதிபதி செபஸ்டியன் குர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
வெளிநாட்டு நிதியில் இயங்கும் மதக் குழுக்களுக்கு தடை விதிக்கும் 2015 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழே ஆஸ்திரிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எனினும் ஆஸ்திரிய அரசு மதச் சமூகத்தை இழிவுபடுத்த விரும்புகிறது என்று ஆஸ்திரியாவின் பிரதான முஸ்லிம் குடியிருப்பாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இப்ராஹிம் ஒல்குன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கை என்று இதற்கு கடும் கண்டனம் வெளியிட்ட துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
துருக்கியின் நியுதவியை பெறும் சுமார் 60 இமாம்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாடுகடத்தப்படுவார்கள் என்று ஆஸ்திரியா குறிப்பிட்டுள்ளது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top