டிரம்ப் கிம் ஜாங் அன்
சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள
ஹொட்டலில் சந்திப்பு
   
சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஹொட்டலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் சந்தித்தனர்
வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.
இவர்களின் சந்திப்பை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் - கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.
 வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top