கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது
கட்டாரிலிருந்து
சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட
தங்க பிஸ்கட்டுக்களுடன்
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர்,
இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
17 இலட்சத்து
49 ஆயிரம் 300 ரூபாய் பெறுமதியுடைய,
தங்க பிஸ்கட்டுக்கள்
5 உடன் குறித்த
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து
கைது செய்யப்பட்டதாகப்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கட்டாரில் 10 வருடங்கள் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
சந்தேகநபர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment