மேல்மாகாண பாடசாலைகளுக்கான
ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதி தலைமையில்
மேல்
மாகாண ஆசிரியர்
பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு
ஆசிரியர் நியமனம்
வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின்
தலைமையில் இன்று
(07) முற்பகல் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.
ஆசிரியர்
நியமனங்களை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்
வகையில் 15 பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நியமனக்
கடிதங்களை வழங்கினார்.
மேல்
மாகாண ஆளுநர்
ஹேமகுமார நாணயக்கார,
முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மேல் மாகாண
கல்வி அமைச்சர்
ரஞ்சித் சோமவங்ச,
மாகாண அமைச்சர்கள்
காமினி திலக்கசிறி,
சுமித்லால் மென்டிஸ், லலித் வணிகரத்ன மற்றும்
மேல் மாகாண
கல்வி அமைச்சின்
செயலாளர் எஸ்.ஜி.விஜேவர்தன
உள்ளிட்ட அதிகாரிகள்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment