இன்று முதல்
1,000cc வாகனங்களின் வரி அதிகரிப்பு
சிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு
1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளன.
நிதியமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (2108.08.01) முதல் அமுலாகும் வகையில், 1,000 cc இலும் குறைந்த எஞ்சின் கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தி வரி இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, 1,000cc இற்குக் குறைந்த கார் ஒன்றின் வரி, ரூபா 15 இலட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 1,000cc இலும் குறைந்த மின்சக்தியில் இயங்கும் Hybrid வாகனத்திற்கான வரி, ரூபா 12.5 இலட்சமாக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஆயினும், 2018 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதம் (LC) திறக்கப்பட்டதும் 2019 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சான்றளிப்பு (Clearance) செய்யப்பட்ட வாகனங்களுக்கு, இவ்வரி இல்லை எனவும், அக்காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, ஏற்கனவே காணப்படும் எஞ்சின் கொள்ளளவுக்கேற்ப வரி அறவிடப்படும் எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், சிறிய ரக கார்களான வெகன் ஆர் (Wagon R), அல்டோ (Alto), நிஸ்ஸான் டேய்ஸ் (Nissan Dayz) போன்றவற்றின் விலை, ரூபா 3 இலட்சம் தொடக்கம் - 3.75 இலட்சங்களால் அதிகரிக்கலாம் என, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment