சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய
162 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?
மக்கள் கேள்வி
தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்ததையடுத்து 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இங்குள்ள மக்களுக்கு சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பாக யாரிடம் தரவுகளைப் பெறுவது என்ற தெளிவற்ற தன்மை உள்ளது. இந்த தோணா அபிவிருத்திக்கு இன்றுவரை எவ்வளவு தொகை பணம் பாவிக்கப்பட்டுள்ளது? மீதி எவ்வளவு தொகை உள்ளது? தோணாவில் செய்யப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் என்ன? என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.
0 comments:
Post a Comment