அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம்
6 ஆம் திகதி வரை
தேசிய தொழில் பாதுகாப்பு வாரம் 



2018 தேசிய தொழில்பாதுகாப்பு வாரம் அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய தொழில்பாதுகாப்பு வார காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளை நாடு முழுவதிலும் நடத்தவதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதன் கீழ் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெவுள்ளது. இந்த வார காலப் பகுதி தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆற்றல் விருது விழா தேசிய மட்டத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top