‘த நேசன்’ நாளிதழின் இணை ஆசிரியர் கடத்தப்பட்டு
சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட
சம்பவம்
மஹிந்தவிடம்
நாளை விசாரணை
வாக்குமூலம்
அளிக்க இணங்கினார்
‘த நேசன்’ நாளிதழின் இணை
ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம்
தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை வாக்குமூலம்
அளிப்பதற்கு இணங்கியுள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு, இந்த விவகாரம்
தொடர்பாக வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக, மஹிந்த ராஜபக்ஸ நேற்று குற்றப் புலனாய்வுப்
பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த
ராஜபக்ஸவின் இல்லத்துக்குச் செல்லும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு,
அவரிடம் இருந்து
வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளும்.
முன்னதாக நான்கு தடவைகள், மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட
போதும் அவர் அதற்குப் பதிலளிக்காத நிலையிலேயே, மஹிந்தவின் இல்லத்துக்கே சென்று விசாரணைகளை
மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, பொலிஸ்ஊடாக வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக
முன்னர் தாம், குற்றப்
புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் அனுப்பியதாகவும், இப்போது, அதனை வைத்து அரசியல் விளையாட்டு
நடத்தப்படுவதாகவும், மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment