சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி
இந்தியப் பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் இரங்கல்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் பூதவுடலுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
இந்தியப் பிரதமர் மோடி ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
- Narendra Modi Retweetedஇந்த துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்கா தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் : PM @narendramodi
- Narendra Modi Retweetedசனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையை துணிவோடு எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார் : PM @narendramodi
- Narendra Modi Retweeted
- Narendra Modi Retweetedதேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு மேம்படுவதையே இலக்காக கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர் : PM @narendramodi
- Narendra Modi Retweetedகலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர் : PM @narendramodi
0 comments:
Post a Comment