விஜயகலாவின் எம்.பி
பதவி பறிபோய்
குடியுரிமையையும் இழப்பாரா?
முன்னாள்
ராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி பறிபோய் ஏழு ஆண்டுகளுக்கு
குடியுரிமையும் இழக்க நேரிடலாம் என
கொழும்பு ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ
விடுதலைப் புலிகள்
அமைப்பு மீண்டும்
தேவையென பகிரங்கமாக
கருத்து வெளியிட்ட
விஜயகலாவிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்
அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என
சட்ட மா
அதிபர் திணைக்களம்,
சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட
மா அதிபர்
திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலா
மகேஸ்வரன் வெளியிட்ட
கருத்து தொடர்பில்
பொலிஸார் நடத்திய
விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய சட்ட
நடவடிக்கைள் ஆராயப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர்
திணைக்களம், கரு ஜயசூரியவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மகளிர்
மற்றும் சிறுவர்
நலன் ராஜாங்க
அமைச்சராக கடமையாற்றிய
காலத்தில் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற நிகழ்வு
ஒன்றில் விஜயகலா
மகேஸ்வரன் உரையாற்றினார்
அதில் விடுதலைப்
புலிகள் மீள
உருவாக வேண்டுமென
வெளியிட்ட கருத்து
குறித்து தனிப்பட்ட
நபர்களும் பொலிஸாரும்
முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த
முறைப்பாடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ்
குழுக்களின் விசாரணை அறிக்கைகள் அண்மையில் பொலிஸ்
மா அதிபரினால்,
சட்ட மா
அதிபர் திணைக்களத்திடம்
வழங்கப்பட்டுள்ளது.
இந்த
விடயம் குறித்து
ஆராய்வதற்கு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் தலைமையிலான
குழுவொன்றை சட்ட மா அதிபர் திணைக்களம்
நியமித்திருந்தது.
பொலிஸாரின்
அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்படக் கூடிய சட்ட
நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபர்
திணைக்களம் ஆராய்ந்துள்ளது.
இதேவேளை,
சட்ட மா
அதிபர் திணைக்களம்
விஜயகலா பற்றிய
அறிக்கை எதனையும்
இன்னும் அனுப்பி
வைக்கவில்லை என சபாநாயகர் அலுவலக சிரேஸ்ட
அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விஜயகலாவின்
கருத்து அரசியல்
அமைப்பிற்கு முரணானது என சட்ட மா
அதிபர் திணைக்களம்
சபாநாயகருக்கு அறிவித்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை
எடுக்கப்பட முடியும் என அந்த அதிகாரி
தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும்,
இலங்கையில் தனியான இராச்சியம் அமைப்பது குறித்து
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தல், அனுசரணை
வழங்குதல் போன்றவற்றை
செய்வதில்லை என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்
சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் அதனை மீறியதனால்
நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதுடன், ஏழு ஆண்டுகளுக்கு
குடியுரிமையும் ரத்து செய்யப்படும் என குறித்த
கொழும்பு ஊடகம்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment