அரசாங்கத்தின் இழுத்தடிப்புக்களுக்கு முடிவு கட்டுவதற்கு
பொது எதிரணியுடனும் எதிர்க் கட்சியுடனும்
பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம்
ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் இழுத்தடிப்புக்களுக்கு முடிவு கட்டுவதற்கு பொது எதிரணியுடனும், எதிர்க் கட்சியுடனும் அடுத்த வாரம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28 ஆவது பேராளர் மாநாடு நேற்று (05) கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
எமக்கு விரைவில் தேர்தலை நடாத்துங்கள். தேர்தலை நடாத்தவிடாமல் மேற்கொள்ளும் சூழ்சிகளை நாம் விரைவில் தகர்த்தெறிவோம்.
புதிய தேர்தல் முறைமை சிறுபான்மையிருக்கு பெரும் பாதிப்பாகும். இந்த தேர்தல் முறைமையைக் காட்டிக் காட்டி தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது இந்த அரசாங்கம். இதற்கு அரசாங்கத்திலுள்ள கட்சிகள் சிலவும் எதிர்க் கட்சியிலுள்ள சிலரும் ஆதரவு வழங்கி வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment