மரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே
வாஜ்பாய் எழுதிய கவிதை

மரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே....என்னை நேரடியாக எதிர்கொண்டு பரிட்சித்துப் பார் என்று மரணம் குறித்து வாஜ்பாய் கவிதை எழுதியுள்ளார்.
பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.
முழுநேர அரசியல்வாதியாக இருந்தாலும் வாஜ்பாய் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். கவிஞராக வாழ்ந்தவர். தனது ஓயாத பணிகளுக்கு இடையே கவிதை எழுதினார். அவற்றில் சிறந்த 51 கவிதைகளைத் தொகுத்துஎனது 51 கவிதைகள்’ (மேரி இக்யாவான் கவிதாயேம்) என்று இந்தியில் கவிதை நூலை வெளியிட்டார்.
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுவாஜ்பாய் கவிதைகள்என்ற தலைப்பில் வெளியானது.
உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் எழுதிய மரணத்தோடு மோதிவிட்டேன் என்ற கவிதையின் சில வரிகள்
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.
இவ்வாறு மரணம் குறித்து வாஜ்பாய் எழுதியிருந்தார்.
வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top