புனித பூமியாகும் மடுமாதா பிரதேசம்
அவ்விடத்தில் புதைந்துள்ள ஒரு உண்மை
இப்பிரதேசம் மன்னாரைச் சேர்ந்த அவ்வா உம்மா என்னும் முஸ்லிம் பெண் (அவ்லியா)
ஒருவரின் சியாரம் காணப்பட்ட பிரதேசமாகும்.
ஆரம்பத்தில் இப்பிரதேசம் / சியாரம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து
வந்தது. கணிசமான தொகையினராக இங்கு வாழ்ந்து வந்த கத்தோலிக்க சமூகத்தினரும் இந்த
சியாரத்தை தரிசித்து நேர்ச்சை செலுத்தி வந்தனர்.
பின்னர் இரு சமூகத்தினரும் சேர்ந்து இச்சியாரத்தின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர்.
சில காலத்தின் பின்னர் கத்தோலிக்கர்
முழுமையாக இச்சியாரத்தின் பொறுப்பை பெற்றுக்கொண்டு இதன் பெயரை மடு
மாதா தேவாலயமாக மாற்றினர்.
இத்தகவல் முன்னாள் கல்முனை பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் வன்னிமையுமான
மர்ஹும் எம்.எஸ்.காரியப்பரின் “The Heritage“ எனும் புத்தகத்தில் காணப்படுகின்றது.
இது தொடர்பான தகவல் அக்கால பிரதம நீதியரசர் சேர் அலெக்சாண்டர் வுட்றெண்டன்
அவர்களின் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக எம்.எஸ்.காரியப்ர் குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர்
சாய்ந்தமருதைச் சேர்ந்த டாகடர் எம்.ஐ.எம். ஜமீல் அவர்கள் மன்னார் சென்றிருந்த போது
முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரிடம் இது தொடர்பாக அவர் வினவியுள்ளார். மடுவில்
அடங்கப்பட்டிருப்பவர் முஸ்லிம் பெண் அவ்லியாதான் என்றும் முஸ்லிம்கள் அங்கு
நேர்ச்சை கொண்டு செல்வது வழமை என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் டாக்டரிடம் கூறியதாக டாக்டர் எம்.ஐ.எம். ஜமீல் எம்மிடம் தகவல் தெரிவித்தார்..
The famous Madhu Church in Mannar was the Shrine of
a Muslim lady who was buried in a nearby jungle and whose tomb became the focus
of a good deal of 'Karamat' says late Hon.M.S.Kariapper M.P. & Vanniyar in
a note titled "The Heritage"
He further says that the Muslims of Mannar
controlled this Shrine at the begining. Roman Catholics who constituted a
substantial portion of the population were votaries who brought gifts on
fulfillment of their vows. At a later stage the shrine was controlled by
muslims & catholics on 50:50 basis. Later on catholics took the full
control of the shrine & named it as 'Our lady of Madhu'. Late Hon.Kariapper
further says that this story appears in a supreme court judgement written by
the then chief justice of ceylon Sir Alexander woodrenton.
Few years back when I visited Mannar & made
inquiries about this from an auto driver, he confirmed that the Shrine is that
of a Muslim woman awliya.
0 comments:
Post a Comment