பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன்
பிரதமர் ரணில் தொலைபேசியில் பேச்சு
பாகிஸ்தான்
பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன், பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
நேற்று
தொலைபேசி மூலம்,
தொடர்பு கொண்ட
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் பிரதமராகப்
பதவியேற்றுள்ளமைக்கு, இம்ரான் கானுக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த
தொலைபேசி உரையாடலின்
போது, இருதரப்பு
உறவுகளை மேலும்
பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், பரஸ்பர
நலன்கள் சார்ந்த
விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது
அவசியம் என்றும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தமக்கு
வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட
பாகிஸ்தான் பிரதமர், இரண்டு நாடுகளும் பலமான,
நட்புறவைக் கொண்டுள்ளன என்றும், அரசியல், பொருளாதார,
பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உட்பட அனைத்து
துறைகளிலும் இருதரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்ள
வேண்டிய தேவை
உள்ளது என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையினதும்
அதன் மக்களினதும்,
தொடர் முன்னேற்றங்களுக்கும்
இம்ரான் கான்
வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
நேற்று முன்தினம்
பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கானுக்கு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச்
செய்தியை அனுப்பியிருந்தார்.
முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர்ர் கோத்தாபய
ராஜபக்ஸவும்
தனது டிவிட்டர் பக்கத்தில் இம்ரான்
கானுக்கு வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment