ஐ.நாவில் இந்தியாவுக்கு இலங்கை ஆதரவு
திருப்பதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
ஐ.நா பாதுகாப்புச்
சபையில் இந்தியாவுக்கு
நிரந்தர உறுப்புரிமையை
வழங்குவதற்கு இலங்கை முழுமையான ஆதரவு
வழங்கும் என்று
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருப்பதி
ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட
பின்னர் செய்தியாளர்களைச்
சந்தித்த போதே
அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்குப்
பயணம் மேற்கொண்டிருந்தார்.
நேற்றுமுன்தினம்
மாலை சென்னை சென்ற பிரதமர், அங்கிருந்த இந்திய
விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான
நிலையத்திற்கு சென்றார். பிறகு, திருப்பதிக்கு காரில் அழைத்து செல்லப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர், இரவு திருமலையில் உள்ள விடுதியில் தங்கினர். காலை 8 மணி அளவில் திருப்பதி ஏழுமலையானை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் சென்று வழிபட்டார். அதையடுத்து சென்னை வழியாக அவர் கொழும்பு திரும்பினார்
பிரதமரின்
வருகையை முன்னிட்டு
திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்கள் படங்களை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே,
திமுக தலைவர்
மு.கருணாநிதியின்
உடல் நலம்
குறித்தும் பிரதமர் தொலைபேசி மூலமாக, கட்சியின்
செயல் தலைவர்
மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment