அமைச்சர் ரிஷாட்டின் வாகன பாவனை
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
அமைச்சின் மேலதிக செயலாளரால் திருத்தம் வெளியீடு
கைத்தொழில்
வர்த்தக அமைச்சர்
ரிஷாட் பதியுதீனுக்கு
ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி
மிரர், லங்கா
தீப பத்திரிகைகளில்
வெளிவந்த செய்திகள்
தொடர்பாக அமைச்சின்
மேலதிகச் செயலாளர்
TDSP பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த
பத்திரிகை ஊடக
நிறுவனத்தின் ஊடகவியலாளர், தரிந்து ஜயவர்தன என்பவரால்
தகவல் அறியும்
சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின்
வாகனப் பாவனை
தொடர்பில் வழங்கப்பட்ட
கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின்
எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட்
பதியுதீனின் பாவனையில் 03 வாகனங்கள் மாத்திரமே
இருப்பதாகவும் வெளியிட்டுள்ள திருத்தத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த
பத்திரிகைகளில், அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் 3 வாகனங்களுக்கு
மேலதிகமாக சட்டத்திற்கு
முரணாக 7 வாகனங்கள்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும்
அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்பு
செயலாளர், மக்கள் தொடர்பாடல் அலுவலர்கள் உள்ளிட்ட
அதிகாரிகளின் வாகனங்களும் அத்தகவலில் தனித்தனியாக குறிப்பிடப்படாத
நிலையில், அவ்வாகனங்கள்,
அமைச்சரின் பாவனைக்கான வாகனங்களாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனையடுத்து,
குறித்த திருத்தத்தை
அமைச்சின் மேலதிக
செயலாளர் வெளியிட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment