அண்ணா சமாதி அருகே வேகமாக தயாராகும் இடம்
கருணாநிதிக்கு சமாதி அமைக்கும் பணியில் மெரினாவில் பள்ளம் தோண்டும்
பணி வேகமாக நடக்கிறது. அனைத்துப் பணிகளும் முடிவடையும் நிலையில் 4 மணிக்கு இறுதி ஊர்வலம்
தொடங்க உள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
மாலை 4-30 மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட வேண்டும்
என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வேலைகள் வேகவேகமாக நடந்து வருகிறது.
மாலை சமாதியின் வேலை முடிந்தவுடன் மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என
திமுக தலைமை அறிவித்துள்ளது.
மறைந்த
திமுக தலைவர்
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு
தொடங்க உள்ளது.
ராஜாஜி மண்டபம், சிவானந்தா
சாலை, வாலஜா
சாலை வழியாக,
அண்ணா சதுக்கத்திற்கு
எடுத்து செல்லப்பட
உள்ளது.
கருணாநிதியை
அடக்கம் செய்வதற்காக
சந்தன பேழை
தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில்,
" ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்"
என்ற
வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 33 ஆண்டுகளுக்கு
முன் அண்ணாதுரையின்
சமாதியின் அருகே
அடக்கம் செய்யும்
போது, தனது
சமாதியில் பொறிக்கப்பட
வேண்டும் என
இந்த வாசகத்தை
கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.
அதே வாசகம்
தற்போது பொறிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment