மஹிந்தவின் வீட்டில் அவசரமாக ஓன்றுகூடிய
தென்னிலங்கை அரசியல் முக்கியஸ்தர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டில் இன்று அரசியல் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவதற்காக மஹிந்த ராஜபக்ஸ வீட்டிற்கு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இன்று காலை அதிகாரிகள் வீட்டிற்கு செல்வதனை அறிந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என் டி சில்வா ஆகியோர் மஹிந்தவின் வீட்டில் ஒன்று கூடியுள்ளனர்.
குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள், மஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி வீட்டில் இருக்கவில்லை.
தனிப்பட்ட வேலைக்காக வெளியே சென்றிருந்தவர் 11.30 மணியளவிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகர் கருஜயசூரியவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top