முஸ்லிம் சமூகத்தில் செப்டம்பர் - 16
உன்னை விற்று பிழைப்பு நடத்துவோருக்கு
வந்து வாய்த்த நாள்தான் செப்டம்பர் பதினாறு!
உன் மரணமோர் உதயம் சிலரின் அதிகார வாழ்க்கைக்கு
நீ பாடுபட்டு சமூகத்திற்காக
தலைநகரில் எழுப்பிய"தாருஸ்ஸலாம்"
இன்று ஒரு சிலரின் கைக்குள்
அது பொய்,புரட்டு ,வஞ்சகத்தின் கோட்டை
இந்நாளில் சோகமான முகத்துடன்
முகநூல்களில் முக்கியஸ்த்தர்களின் புகைப்படங்கள்
போதாக்குறைக்கு ஏழைகள் வாங்கும்
இரண்டு கிலோ அரிசிச் செய்தியையும் சேர்த்து
தினசரிகளில் செய்தி,படமாகமுன்பக்கம்
கூடவே அழகிய தொனியில் அல் குர்ஆன் நிகழ்வும்
கஸீதாக்களும் என்றும் அறிவிக்கப்படும்
இனி அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை..............................................
0 comments:
Post a Comment