புதிய அரசியலமைப்பின் நகல் வரைபில்
கல்முனை கரையோர மாவட்டம்
உள்ளடக்கப்பட்டிருக்குமா?
புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை அரசாங்கம் மிக விரைவில் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று (07) பாராளுமன்றத்தில்
தெரிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கை எனத் தெரிவித்து அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அரசாங்கத்திடம்
முன்வைத்துள்ள கோரிக்கையான கல்முனை கரையோர
மாவட்டம் புதிய அரசியலமைப்பின் நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்குமா என அம்பாறை மாவட்ட
கரையோர முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமாச் செய்வேன் என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்த போது கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் செயலகத்தில் கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி (2016-07-11) திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறியிருந்தார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனைக் கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் மூச்சுக்கூட விடுவதாக இல்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் அபிலாஷைகளை குழிதோண்டி புதைக்க முடியாது. அரசாங்கம் நினைத்தால் ஓரிரு நாட்களில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியும். அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் 70 சதவீதமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்தும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படுகின்றனர். இது எமது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். அதனால் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன். பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை. என்று சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமாசெய்வேன் என்று ஆவேசமாகக் கூறிய பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை அரசாங்கம்
மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் பிரதி அமைச்சரின் கோரிக்கை அதில் உள்ளடக்கப்பட்டிருக்குமா?
அப்படி கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
அவர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கப் போகின்றது என்றும் அம்பாறை மாவட்ட கரையோர
முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment