12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம்
– அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
மற்றும் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின்
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உம்ரா கடமைக்கு மக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஹக்கீம்
தலைமையிலான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற
உறுப்பினர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு
மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அதேவேளை,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் தலைவர்
றிசாத் பதியுதீன்
தலைமையில் நேற்று
அதிகாலை 2 மணியளவில்
மக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இக்கட்சியின் மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்காவில்
இவர்களுடன் இணைந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாடாளுமன்ற உறுப்பினரும்
பின்னர் உம்ரா கடமைக்கு மக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐக்கிய
தேசிய முன்னணிக்கு
ஆதரவு அளித்து
வந்த, இந்த
இரண்டு கட்சிகளினதும்,
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்காவுக்கு
ஒன்றாகப் புறப்பட்டுச்
சென்றமை குறித்து
அரசியல் வட்டாரங்களில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும்
13ஆம் திகதி இவர்கள் ஹஜ்
யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்புவர்
என்று கூறப்படுகிறது.
அதற்கு
மறுநாள், வரும்
14ஆம் திகதி நாடாளுமன்றத்தில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான
நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.





0 comments:
Post a Comment