சாய்ந்தமருது தோணாவின் அவல நிலையை
நேரடியாகக் கண்டுகொண்ட கல்முனை முதல்வர்
16 கோடி 20 இலட்சம் செலவிடப்பட்டது எங்கே?
சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்திக்கு அரசு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கீடு செய்தும் அவசியமான வேலைத் திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை கல்முனை முதல்வர் அபூபக்கர் முஹம்மது றகீப் இன்று நேரடியாக தோணாப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து கண்டுகொண்டார்.
சாய்ந்தமருது தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி
செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான
பொது மக்களினை வெள்ளப் பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்ததையடுத்து 162 மில்லியன்
ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அப்படி ஒதுக்கப்பட்ட பெரும் தொகைப் பணத்தைக் கொண்டு சாய்ந்தமருது
தோணா திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதை கல்முனை மாநகர சபையின் முதல்வர்
ஏ.எம்.றக்கீப் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
சாய்ந்தமருது தோணா பகுதிக்கு விஜயம் செய்து கண்டுகொண்டார்.
வெள்ள நீரை உள்வாங்கி கடலுக்கு செலுத்தும் தோணா, சல்பீனியாக்களினாலும்
திண்மக் கழிவுகளினாலும் நிறைந்து, வெள்ள நீரோட்டத்திற்கு தடையாக காணப்படுவதையும் முதல்வர்
கண்டுகொண்டார்.
தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான
பொதுமக்களினை வெள்ளப் பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சரவை 16 கோடி 20 இலட்சம் ரூபா பணத்தைச் செலவிடுவதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இத்தொகைப்பணம் எங்கு செலவிடப்பட்டது?
இத்தொகைப் பணத்திற்கு தோணாவில் என்ன வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?
இந்த வேலத் திட்டங்களை செய்தவர்கள் யார்?
இதற்கு யார் பொறுப்பு?
என்பதை சாய்ந்தமருது மக்கள் அறிய விரும்புகின்றார்கள்.
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் விடுத்த அவசர வேண்டுகோளின் பேரில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோர் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது தோணா பகுதிக்கு விஜயம் செய்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை சாய்ந்தமருது மக்கள்
பாராட்டுகின்றார்கள்.
இதோ அமைச்சரவை முடிவு......
இதோ அமைச்சரவை முடிவு......
Residents in Sainthamaruthu Divisional Secretary's Division in Ampara District are affected by the floods in the lagoon annually. Absence of proper drains, some aquatic plants obstructing the flow of water, and waste disposal around the lagoon by residents have caused this situation. Accordingly, the proposal made by City Planning and Water Supply Minister Rauff Hakeem to construct a barrier around the lagoon at an estimated cost of Rs. 162 million as a measure to these issues benefiting more than 10,000 people of 2,700 families, was approved by the Cabinet of Ministers.











0 comments:
Post a Comment