சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸி ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.




0 comments:
Post a Comment