பெரு நாட்டில் பயணிகள் பஸ் மீது
லாரி மோதியதில் 18 பேர் பரிதாப பலி
பெரு
நாட்டில் பயணிகள்
பஸ் மீது லாரி மோதிய
விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்து சோகத்தை
ஏற்படுத்தியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
பெரு
நாட்டில் புனோ
பகுதியில் டிடிகாகா
ஏரி அருகே
உள்ள தேசிய
நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று
கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த
லாரி பஸ் மீது வேகமாக
மோதியது.
இந்த
விபத்தில் சம்பவ
இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில்
ஒரு குழந்தை
மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர்
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து
சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற
பொலிஸார் போக்குவரத்தை
சரிசெய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
பயணிகள் பஸ் மீது லாரி
மோதிய விபத்தில்
18 பேர் பலியானது
அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment