ஐ.தே.கட்சியின்
முக்கிய புள்ளியிடம்
பேரம்
பேசிய மஹிந்த அணி!
புதிய
அரசாங்கத்தில் இணைந்து கொள்ள
2.8 மில்லியன்
அமெரிக்க டொலர்
ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை மஹிந்த
அரசாங்கத்திற்குள் இழுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ராஜாங்க அமைச்சரான ரங்கே பண்டாரவை அரசாங்கத்தில்
இணைந்துக் கொள்வதற்காக பேரம் பேசப்பட்டதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு
செய்யப்படவுள்ளதாக ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா
தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு
தீர்வு காணும் முக்கிய விடயமாக பெரும்பான்மை மாறியுள்ளது.
இந்நிலையில் இரண்டு பிரதான தரப்பினரும் தமது கட்சியின்
பெரும்பான்மை நிரூபிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில்
விக்மரசிங்க பெரும்பான்மை பலத்துடன் உள்ளார். இந்நிலையில் புதிய பிரதமர் தனது
பெரும்பான்மை நிரூபிக்க இன்னும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள
உறுப்பினர்களுக்கு என்ன விலை கொடுத்தேனும் வாங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர்
பசில் ராஜபக்ஸ ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment